(1091)

(1091)

பேய்த்தாயை முலையுண்ட பிள்ளைதன்னைப் பிணைமருப்பில் கருங்களிற்றைப்  பிணைமான்னோக்கின்,

ஆய்த்தாயர் தயிர்வெண்ணெ யமர்ந்தகோவை அந்தணர்தம் அமுதத்தைக் குரவைமுன்னே

கோத்தானை, குடமாடு கூத்தன்றன்னைக் கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக்

காத்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

 

பதவுரை

தாய்

தாய்வடிவையெடுத்துக் கொண்டு கொல்லவந்த

பேயை

பூதனையென்னும் பேய்ச்சியினுடைய

முலை

(விஷந்தடவின) முலையை

உண்ட

உறிஞ்சியமுதுசெய்க

பிள்ளைதன்னை

குமாரனும்,

பிணை மருப்பின் கரு களிற்றை

இரண்டு கொம்பு முளைத்த கரிய யானைக்குட்டிபோல்  இனியவனும்,

மான் பிணை நோக்கின்

மான் பேடையின் நோக்குப் போன்ற நோக்கையுடைய

ஆய் தாயர்

இடைத்தாயரான யசோதையினுடைய

தயிர் வெண்ணெய்

தயிரிலும் வெண்ணெயிலும்

அமர்ந்த

ஊன்றியிருந்த

கோவை

ஸ்வாமியும்,

அந்தணர் தம் அமுதத்தை

வைதிகர்களுக்குப் பரம யோக்யனும்,

முன்னே

முன்பொருகால்

குரவை கோத்தானை

இடைப்பெண்களோடு ராஸக்ரிடை செய்தவனும்

குடம் ஆடு கூத்தன் தன்னை

குடக்கூத்தாடினவனும்

கோகுலங்கள் தளராமல்

(இந்திரன் பெய்வித்த பெருமழையினால்) பசுங்கூட்டங்கள்  வருந்தாதபடி

குன்றம் ஏந்தி

கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தி

காத்தானை

ரக்ஷித்தவனுமான

எம்மானை

எம்பெருமானை

கடி பொழில் சூழ் கடன் மல்லைத் தலசயனத்தே கண்டு கொண்டேன்-.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

English Translation

He is the child who sucked the breast of Putana, the baby elephant who stole the fawn-eyed Yasoda’s curds and butter; he is the king worshipped by Vedic seers; he is the one who danced the Rasa with Gopis. He danced with pots, he held a mountain to stop the rain, and saved the cows. Amid cool fragrant groves, I have seen Him in Talasayanam at Kadal Mallai.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top