(1091)
பேய்த்தாயை முலையுண்ட பிள்ளைதன்னைப் பிணைமருப்பில் கருங்களிற்றைப் பிணைமான்னோக்கின்,
ஆய்த்தாயர் தயிர்வெண்ணெ யமர்ந்தகோவை அந்தணர்தம் அமுதத்தைக் குரவைமுன்னே
கோத்தானை, குடமாடு கூத்தன்றன்னைக் கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக்
காத்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
பதவுரை
|
தாய் |
– |
தாய்வடிவையெடுத்துக் கொண்டு கொல்லவந்த |
|
பேயை |
– |
பூதனையென்னும் பேய்ச்சியினுடைய |
|
முலை |
– |
(விஷந்தடவின) முலையை |
|
உண்ட |
– |
உறிஞ்சியமுதுசெய்க |
|
பிள்ளைதன்னை |
– |
குமாரனும், |
|
பிணை மருப்பின் கரு களிற்றை |
– |
இரண்டு கொம்பு முளைத்த கரிய யானைக்குட்டிபோல் இனியவனும், |
|
மான் பிணை நோக்கின் |
– |
மான் பேடையின் நோக்குப் போன்ற நோக்கையுடைய |
|
ஆய் தாயர் |
– |
இடைத்தாயரான யசோதையினுடைய |
|
தயிர் வெண்ணெய் |
– |
தயிரிலும் வெண்ணெயிலும் |
|
அமர்ந்த |
– |
ஊன்றியிருந்த |
|
கோவை |
– |
ஸ்வாமியும், |
|
அந்தணர் தம் அமுதத்தை |
– |
வைதிகர்களுக்குப் பரம யோக்யனும், |
|
முன்னே |
– |
முன்பொருகால் |
|
குரவை கோத்தானை |
– |
இடைப்பெண்களோடு ராஸக்ரிடை செய்தவனும் |
|
குடம் ஆடு கூத்தன் தன்னை |
– |
குடக்கூத்தாடினவனும் |
|
கோகுலங்கள் தளராமல் |
– |
(இந்திரன் பெய்வித்த பெருமழையினால்) பசுங்கூட்டங்கள் வருந்தாதபடி |
|
குன்றம் ஏந்தி |
– |
கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தி |
|
காத்தானை |
– |
ரக்ஷித்தவனுமான |
|
எம்மானை |
– |
எம்பெருமானை |
|
கடி பொழில் சூழ் கடன் மல்லைத் தலசயனத்தே கண்டு கொண்டேன்-. |
||
English Translation
He is the child who sucked the breast of Putana, the baby elephant who stole the fawn-eyed Yasoda’s curds and butter; he is the king worshipped by Vedic seers; he is the one who danced the Rasa with Gopis. He danced with pots, he held a mountain to stop the rain, and saved the cows. Amid cool fragrant groves, I have seen Him in Talasayanam at Kadal Mallai.
