(1071)

(1071)

இந்திர னுக்கென் றாயர்க ளெடுத்த எழில்விழ வில்பழ நடைசெய்,

மந்திர விதியில் பூசனை பெறாது மழைபொழிந் திடத்தளர்ந்து, ஆயர்

அந்தமோ டினவா நிரைதள ராமல் எம்பெரு மானரு ளென்ன,

அந்தமில் வரையால் மழைதடுத் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.

 

பதவுரை

இந்திரனுக்கு என்று

இந்திரனை உத்தேசித்து

ஆயர்கள் எடுத்த

இடையர்களால் நடத்தப்பட்டு வந்த

எழில் விழவில்

சிறந்த உத்ஸவத்திலே

பழநடை செய்

அநாதி ஆசாரமாகச் செய்து வருகிற

மந்திரம் விதியில் பூசனை பெறாது

ஸங்கேதப்படி நடக்கவேண்டிய ஆராதனையைப் பெறாமல்

மழை பொழிந்திட

(இந்திரன்) மழை பெய்விக்க,

ஆயர்

இடையர்

தளர்ந்து

துன்பப்பட்டு

எம் பெருமான்

“எங்களுக்குத் தலைவனான கண்ணபிரானே!

எம் தம்மோடு

நாங்களும்

இனம் ஆ நிரை

கூட்டங்கூட்டமான பசுக்களின் திரளும்

தளராமல்

(மழையினால்) நோவு படாதபடி

அருள் என்ன

ரக்ஷித்தருளவேணும்” என்று பிரார்த்திக்க

அந்தம் இல் வரையால்

அளவில்லாத (மிகப்பெரிய) கோவர்த்தனமலையைக கொண்டு

மழை தடுத்தானை

அந்த மழையைத் தடுத்தருளின பெமானை

திருவல்லிக்கேணி கண்டேன்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருவாய்ப்படியில் வருஷந்தோறும் இந்திரனுடைய பூஜை பெரிய திருவிழாவாக நடத்தப் பட்டு வந்தமையால் எழில்விழவு எனப்பட்டது.  மந்திரவிதி = வேதத்துக்கு அநதிகாரிகளான இடையர்களுக்கு மந்திர விதியுண்டோ வென்னில்; இங்கு மந்த்ரமாவது ஆலோசனை; அதாவது ஸங்கேதம்.

 

English Translation

When the great feast,-that the cowherds used to offer with chants from yore,-was not forthcoming, Indra rained hailstones, which made the cowherds lose heart and seek Krishna for protection, whereupon our Lord held aloft the matchless Govardhana mountain, and stopped the rains. I have seen Him in Tiruvallikkeni.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top