(1072)

(1072)

இந்துணைப் பதுமத் தலர்மகள் தனக்கும் இன்பன்நற் புவிதனக் கிறைவன்,

தந்துணை யாயர் பாவைநப் பின்னை தனக்கிறை மற்றையோர்க் கெல்லாம்

வன்துணை, பஞ்ச பாண்டவர்க் காகி வாயுரை தூதுசென் றியங்கும் என்துணை,

எந்தை தந்தைதம் மானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.

 

பதவுரை

இன் துணை

தனக்கினிய துணையான

பதுமத்து அலர் மகள் தனக்கும் இன்பன்

தாமரைப்பூவிற் பிறந்த பிராட்டிக்கு இன்பனும்

நல் புவி தனக்கு இறைவன்

ஸ்ரீபூமிப் பிராட்டிக்கு நாதனும்

தன் துணை

தன்னையே துணையாகவுடையளான

ஆயர்பாவை நப்பின்னை தனக்கு இறை

ஆயர்மகளான நப்பின்னைப் பிராட்டிக்கு நாயகனும்

மற்றையோர்க்கு எல்லாம்

மற்றுமுள்ள எல்லார் தமக்கும்

வன் துணை

ஒருகாலும் விட்டு நீங்காத துணையாயிருப்பவனும்

பஞ்ச பாண்டவர்க்கு ஆகி

பஞ்ச பாண்டவர்களுக்காய்

தூது சென்று

தூதனாக எழுந்தருளி

வாய் உரை இயங்கும்

வாய் வார்த்தைகளைச் சொன்னவனும்

என் துணை

எனக்குத் துணையானவனும்

எந்தை தந்தை தம்மானை

எம் குலநாதனுமான பெருமானை

திருவல்லிக்கேணி கண்டேன்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்கிற திவ்ய மஹிஷிகள் மூவர்க்கும், 1.  “தக்கார் பலர் தேவிமார் சாலவுடையீர்” 2.  “பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்யத்துவரையென்னுமதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர்” என்கிறபடியே மற்றும் பல தேவிமார்களுக்கும் நாயகனென்கிறது முன்னடிகளில்.

பத்மம் என்ற வடசொல் பதுமமெனத் திரிந்தது.  பதுமத்தலர்-தாமரைப்பூ; அதன் மகள்-ஸ்ரீமஹாலக்ஷ்மி.  எம்பெருமான் தேவசரீரத்தையோ மநுஷ்யசரீரத்தையோ மற்றும் எந்த சரீரத்தைப் பரிகரஹிக்கிறானோ அந்தந்த சரீரங்களுக்குத் தகுதியாகப் பிராட்டிதானும் உடலெடுத்து உடன்கூடுகிறா ளென்று சாஸ்த்ரமாதலால் ‘இன் துணை’  என்று பிராட்டிக்கு விசேஷணமிடப்பட்டது.

 

English Translation

Sweet companion to his beloved lotus dame Lakshmi, Lord of Dame Earth, Lord to his companion cowherd-dame Nappinnai, and a bad companion to others, he went as a messenger for the five Pandavas and spoke in their behalf. He is my companion and master, my father’s father. I have seen Him in Tiruvallikkeni.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top