(1071)
இந்திர னுக்கென் றாயர்க ளெடுத்த எழில்விழ வில்பழ நடைசெய்,
மந்திர விதியில் பூசனை பெறாது மழைபொழிந் திடத்தளர்ந்து, ஆயர்
அந்தமோ டினவா நிரைதள ராமல் எம்பெரு மானரு ளென்ன,
அந்தமில் வரையால் மழைதடுத் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.
பதவுரை
|
இந்திரனுக்கு என்று |
– |
இந்திரனை உத்தேசித்து |
|
ஆயர்கள் எடுத்த |
– |
இடையர்களால் நடத்தப்பட்டு வந்த |
|
எழில் விழவில் |
– |
சிறந்த உத்ஸவத்திலே |
|
பழநடை செய் |
– |
அநாதி ஆசாரமாகச் செய்து வருகிற |
|
மந்திரம் விதியில் பூசனை பெறாது |
– |
ஸங்கேதப்படி நடக்கவேண்டிய ஆராதனையைப் பெறாமல் |
|
மழை பொழிந்திட |
– |
(இந்திரன்) மழை பெய்விக்க, |
|
ஆயர் |
– |
இடையர் |
|
தளர்ந்து |
– |
துன்பப்பட்டு |
|
எம் பெருமான் |
– |
“எங்களுக்குத் தலைவனான கண்ணபிரானே! |
|
எம் தம்மோடு |
– |
நாங்களும் |
|
இனம் ஆ நிரை |
– |
கூட்டங்கூட்டமான பசுக்களின் திரளும் |
|
தளராமல் |
– |
(மழையினால்) நோவு படாதபடி |
|
அருள் என்ன |
– |
ரக்ஷித்தருளவேணும்” என்று பிரார்த்திக்க |
|
அந்தம் இல் வரையால் |
– |
அளவில்லாத (மிகப்பெரிய) கோவர்த்தனமலையைக கொண்டு |
|
மழை தடுத்தானை |
– |
அந்த மழையைத் தடுத்தருளின பெமானை |
|
திருவல்லிக்கேணி கண்டேன்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திருவாய்ப்படியில் வருஷந்தோறும் இந்திரனுடைய பூஜை பெரிய திருவிழாவாக நடத்தப் பட்டு வந்தமையால் எழில்விழவு எனப்பட்டது. மந்திரவிதி = வேதத்துக்கு அநதிகாரிகளான இடையர்களுக்கு மந்திர விதியுண்டோ வென்னில்; இங்கு மந்த்ரமாவது ஆலோசனை; அதாவது ஸங்கேதம்.
English Translation
When the great feast,-that the cowherds used to offer with chants from yore,-was not forthcoming, Indra rained hailstones, which made the cowherds lose heart and seek Krishna for protection, whereupon our Lord held aloft the matchless Govardhana mountain, and stopped the rains. I have seen Him in Tiruvallikkeni.
