(1058)

(1058)

காசை யாடை மூடியோடிக் காதல்செய் தானவனூர்,

நாச மாக நம்பவல்ல நம்பி நம்பெருமான்,

வேயி னன்ன தோள்மடவார் வெண்ணெயுண் டானிவனென்று

ஏச நின்ற வெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.

 

பதவுரை

காசை ஆடை

காஷாய வஸ்த்ரத்தினால்

மூடி

உடம்பை மறைத்துக்கொண்டு

ஓடி

(பஞ்சவடிக்கு) ஓடிவந்து

காதல் செய்தானவன்

(பிராட்டியிடத்தில்) ஆசை கொண்டவனான இராவணனுடைய

ஊர்

ஊராகிய இலங்கையானது

நாசம் ஆக நம்ப வல்ல

நாசமாகும்படி ஸங்கல்பித்த

நம்பி

பரிபூர்ண சக்தியையுடையவனும்

நம்பெருமான்

நமக்கு ஸ்வாமியும்

வேயின் அன்னதோள் மடவார்

மூங்கிலோடு ஒத்த தோள்களையுடைய இடைச்சியர்

இவன் வெண்ணெய் உண்டான் என்று ஏச நின்ற எம்பெருமான

‘இவன் வெண்ணெய் திருடி உண்டவன்’ என்று சொல்லிப்பரிஹஸிக்கும்படி நின்றவனுமான எம்பெருமான்

எவ்வுள் கிடந்தான்

திருவெவ்வுளூரில் திருக்கண் வளர்ந்தருளா நின்றான்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** –  முன்னிரண்டடிகளால் ஸ்ரீராமாவதார வ்ருத்தாந்தத்தையும், பின்னிரண்டடிகளால் ஸ்ரீக்ருஷ்ணாவதார வ்ருத்தாந்தத்தையும் அநுஸந்தித்து,  இப்படி ராமகிருஷ்ணாதி அவதாரங்கள் செய்தருளின பெருமான்றானே திருவெவ்வுளூரிலே வந்து சாய்ந்தருளா நின்றானென்கிறார்.

காஷாயம் என்ற வடசொல்  காசையெனத் திரிந்தது.  தானவன்-ஆஸூரப்ரகிருதி.

 

English Translation

Our Lord decided to destroy the city of Ravana who came disguised as a russet cloth mendicant and sought to make love to Sita. Our very same Lord was also the laughing stock of cowherd girls with bamboo-slender arms, when he was caught stealing butter. He is the Lord reclining in Evvul.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top