(1059)
தைய லாள்மேல் காதல்செய்த தானவன் வாளரக்கன்,
பொய்யி லாத பொன்முடிக ளொன்பதோ டொன்றும்,அன்று
செய்த வெம்போர் தன்னி லங்கோர் செஞ்சரத் தாலுருள,
எய்த வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.
பதவுரை
|
தையலாள்மேல் |
– |
அழகிற் சிறந்த பிராட்டி விஷயத்திலே |
|
காதல்செய்த |
– |
காமம் கொண்ட |
|
தானவன் |
– |
ஆஸூரப்ருக்ருதியாய் |
|
வாள் |
– |
வாளாயுதத்தை யுடையவனான |
|
அரக்கன் |
– |
இராவணனுடைய |
|
பொய் இலாத பொன் முடிகள் |
– |
மெய்யான பொன்முடிகள் |
|
ஒன்பதோடு ஒன்றும் |
– |
பத்தையும் |
|
அன்று அங்கு செய்த வெம்போர் தன்னில் |
– |
முன்பு ராமாவதாரத்திலே கடற்கரையில் செய்த கோரமான யுத்தத்திலே |
|
ஓர் செம் சரத்தால் உருள எய்த எந்தை எம் பெருமான் |
– |
ஒப்பற்ற சிவந்த பாணத்தினாலே உருட்டின எம் பெருமான் |
|
எவ்வுள் கிடந்தானே-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பொய்இலாத பொன்முடிகள் = தலைகட்குப் பொய்யில்லா மையாவது -தனது மாயச்செயல் வல்லமைக்கிணங்க மாயாரூபமான தலைகளைக் காட்டிவிட்டு மெய்யான தலைகளைக்கொண்டு தப்பிப்பிழைத்தா னென்கையன்றியே உண்மையான தலைகளுக்கே அறுப்புண்டானென்கை. திசைகளெங்குந்திரிந்து வெற்றிபெற்று வீராபிஷேகம் விஜயாபிஷேகம் என்று செய்து கொண்ட அபிஷேகங்களில் சிறிதும் பொய்யின்றியே உண்மையான ஏற்றமுடைய கிரீடங்கள் பத்தும் உருள என்னவுமாம்.
English Translation
The Lord felled the ten gold crowns of the sword-wielding Rakshasa king Ravana in a fierce battle, raining hot arrows over his heads. He is our Lord reclining in Evvul.
