(1057)
மின்னு மாமுகில் மேவு தண்திரு வேங்க டமலை கோயில்மேவிய,
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை,
கன்னி மாமதிள் மங்கை யர்க்கலி கன்றி யிந்தமி ழாலு ரைத்த, இம்
மன்னு பாடல்வல் லார்க்கிட மாகும் வானுலகே.
பதவுரை
|
மின்னும் மா முகில் மேவு |
– |
மின்னுகின்ற காளமேகங்கள் வந்து சேருகிற |
|
தண் திரு வேங்கடம் மலை கோயில் மேவிய |
– |
குளிர்ந்த திருமலையைக் கோயிலாகக் கொண்டு எழுந்தருளி யிருப்பவனும், |
|
அன்னம் ஆய் நிகழ்ந்த |
– |
ஹம்ஸ ரூபியாய்த் திரு வவதரித்தவனும் |
|
அமரர் பெருமானை |
– |
நித்ய ஸூரிகளுக்குத் தலைவனுமான பெருமான் விஷயமாக, |
|
கன்னி மா மதிள் மங்கையர் கலிகன்றி |
– |
நிலைநின்ற பெரிய மதில்களையுடைய திருமங்கை நாட்டில் உள்ளவர்களுக்குத் தலைவரான ஆழ்வார் |
|
இன் தமிழால் உரைத்த |
– |
செவிக்கினிய தமிழ்ப் பாஷையாலே அருளிச்செய்த |
|
மன்னு |
– |
(வேதம்போலே) நித்யமான |
|
இப்பாடல் |
– |
இப்பாசுரங்களை |
|
வல்லார்க்கு |
– |
ஓதவல்லவர்களுக்கு |
|
வான் உலகு |
– |
பரமபதம் |
|
இடம் ஆகும் |
– |
வாஸஸ்தானமாகும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “மின்னுமா முகில்மேவு” என்ற விசேஷனம்- பெருமாளும் பிராட்டியும் கூடி வாழ்கிற வாழ்ச்சியை ஸூசிப்பித்ததாகவுமாம். மின்னின் ஸ்தானத்திலே பிராட்டியும், முகிலின் ஸ்தானத்திலே எம்பெருமானும். கன்னி – அழிவில்லாமை,
English Translation
The Lord who came as a swan to reveal the Vedas, the Lord of gods, resides in Venkatam hills, his temple is touched by the dark lightning clouds. These sweet garlands of Tamil songs on him are by stone-walled Mangai-king Kalikanri. Those who can master it will find a place in the world of the celestials.
