(1056)
கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய் என்நெஞ்சமென் பாய் துணிந்துகேள்,
பாடி யாடிப் பலரும் பணிந்தேத்திக் காண்கிலா,
ஆடு தாமரை யோனு மீசனும் அமர் கோனும்நின் றேத்தும்,வேங்கடத்து
ஆடு கூத்தனுக் கின்று அடிமைத்தொழில் பூண்டாயே.
பதவுரை
|
(இதற்கு முன்பெல்லாம்) |
||
|
கூடி |
– |
உலகத்தாரோடே கூடி |
|
ஆடி |
– |
அவர்கள் எந்த விஷயங்களிலே ஊன்றுவர்களோ அந்த விஷயங்களிலே ஊன்றி, |
|
உரைத்ததே உரைத்தாய் |
– |
அவர்கள் என்ன வார்த்தைகளைச் சொல்லுவார்களோ அந்த வார்த்தை களையே சொல்லிக் கொண்டிருந்த |
|
என் நெஞ்சம் என்பாய் |
– |
என் மனமே! |
|
துணிந்து கேள் |
– |
(இப்போது நான் உனக்கு மகிழ்ந்து சொல்வதை) விச்வஸித்துக் கேள்; |
|
பலரும் |
– |
எத்தனையோ பேர்கள் |
|
பாடி |
– |
(பகவத் குணங்களைப்) பாடிக் கொண்டும் |
|
ஆடி |
– |
கூத்தாடிக்கொண்டும் |
|
பணிந்து |
– |
ஆச்ரயித்து |
|
ஏத்தி |
– |
துதித்தும் |
|
காண்கிலா |
– |
ஸாக்ஷாத்கரிக்க முடியாதவனும், |
|
ஆடு தாமரையோனும் ஈசனும் அமரர் கோனும் நின்று ஏத்தும் வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு |
– |
வெற்றியையுடைய பிரமனும் சிவனும் இந்திரனும் நிலை நின்று போற்றுமிடமான திருமலையிலே நிற்பவனும் (முன்பு) குடக்கூத்தாடினவனுமான பெருமானுக்கு |
|
இன்று அடிமைத்தொழில் பூண்டாயே-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “கூடியாடி உரைத்ததே உரைத்தாய்” என்றவிது தமது நெஞ்சின் பூர்வாவஸ்தையைச் சொன்னபடி. (தம்முடைய பூர்வாவஸ்தையையே கூறியவாறு.) நெஞ்சே! நீ நேற்றுவரை எப்படி போதுபோக்கித் திரிந்தாய்!; இன்று எப்படியானாய்! என்று ஆச்சரியம் தோற்ற அருளிச் செய்கிறார்.
விஷயாந்தரங்களிலே மண்டித்திரிகிற ஸம்ஸாரிகளோடே கூடியும், அவர்கள் அநுபவிக்கிற விஷயங்களையே அநுபவித்தும், அவர்கள் பேசுகிற பேச்சுக்களையே பேசியும் போந்தாயன்றோ நீ நேற்று வரையில்; இப்படியிருந்த நீ இன்று திடீரென்று எப்படிப்பட்ட நிலைமைக்கு வந்துவிட்டாய்!; நீ பெற்ற பாக்கியம் நீ அறிகின்றிலையாகையால் நான் எடுத்துச் சொல்லுகிறேன், அன்புடன் கேளாய் நெஞ்சமே!; பக்திக்குப் போக்குவிட்டுப் பாடியுமாடியும் பலரும் பணிந்து ஏத்தி அவ்வளவிலும் காணமுடியாதவனும், பிரமன் சிவனிந்திரன் முதலான மேலாத் தெய்வங்கள் மேவித்தொழப் பெற்றவனுமான திருவேங்கடமுடையான் திறத்திலே அடிமைத்தொழில் பூண்டாய்காண் என்கிறார்.
இரண்டாமடியின் முடிவில் “காண்கிலா” என்றும், “காண்கிலார்” என்றும் பாடபேதமுண்டு. காண்கிலா வென்பதைத் திருவேங்கடமுடை யானுக்கு விசேஷணமாக்கி யுரைத்தல் ஒரு யோஜநை; தாமரையோனுக்கும் ஈசனுக்கும் அமரர்கோனுக்கும் விசேஷணமாக்கி யுரைத்தல் மற்றொரு யோஜநை. தங்களைப் பணிந்தவர்களுங்கூடத் தங்களைக் காணப்பெறாதபடியான ஏற்றமுடைய பிரமன் முதலியோர் நின்று ஏத்தப்பெற்ற திருவேங்கமுடையான் என்கை.
ஆடு தாமரையோன் = ‘ஆடு’ என்று வெற்றிக்குப் பெயர்; வெற்றியையுடைய பிரமன்-உலகங்களைப் படைக்க வல்லவனாகையாகிற ஸாமர்த்தியம் வாய்ந்த பிரமன் என்கை.
English Translation
O Heart! Joining heretic schools, you repeat what they say. They have expounded many truths they say. They have expounded many truths but none of them has seen the Lord. Our potdancer-Lord resides in Venkatam, his temple is worshipped by Brahma, Siva, Indra and all the celestials. Today you too have entered into his service.
