(1013)
எரிந்தபைங்கணிலங்குபேழ்வாயெயிற்றொடி தெவ்வுருவென்று
இரிந்து வானோர் கலங்கியோட விருந்த வம்மான திடம் *
நெரிந்தவேயின் முழையுள் நின்று நீணெறிவாயுழுவை *
திரிந்தவானைச் சுவடுபார்க்கும் சிங்கவேள் குன்றமே.
பதவுரை
எரிந்த | – | (சீற்றத்தாலே) ஜ்வலிக்கின்ற |
பை கண் | – | பசுமைதங்கிய கண்களோடும் |
இலங்கு பேழ்வாய் எயிற்றொடு | – | விளங்கா நின்ற பெரிய வாயில் பற்களோடும் கூடியிருக்கிற |
இது | – | இந்த நரசிங்கத் திருக்கோலமானது |
எவ்வுரு என்று | – | என்ன பயங்கரமான ரூபம்! என்று அஞ்சி |
வானோர் | – | தேவர்கள் |
இரிந்து கலங்கி ஓட | – | அங்குமிங்கும் சிதறிக் கால் தடுமாறி ஓடும்படியாக |
இருந்த | – | எழுந்தருளியிருந்த |
அம்மானது இடம் | – | ஸர்வேசரனுடைய இடமாவது:- |
உழுவை | – | புலிகளானவை |
நெரிந்த வேயின் முழையுள் நின்று | – | நெருக்கமான மூங்கிற் புதர்களினின்றும் |
நீள் நெறி வாய் | – | பெரிய வழியிலே (வந்து) |
திரிந்த ஆனை சுவடு பார்க்கும் | – | காட்டில் திரிகின்ற யானைகள் போன அடையாளத்தைஆராய்ந்து பார்க்குமிடமான |
சிங்கவேள்குன்றம்-. | ||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
#1013
எரிந்த பைங் கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடு, இது எவ் உரு என்று,
இரிந்து, வானோர் கலங்கி ஓட, இருந்த அம்மானது இடம்
நெரிந்த வேயின் முழையுள் நின்று, நீள் நெறிவாய், உழுவை
திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும் சிங்கவேழ்குன்றமே. (1-7-6)
* * *- (எரிந்தபைங்கண்.) சீற்றத்தாலே அக்நிஜ்வாலைபோலே ஜ்வலிக்கிற சிவந்த கண்ணையும் ஒளிவிடாநின்ற பெரிய வாயையும் கோரப்பற்களையும் கண்டு “அப்பப்ப! இதென்ன உரு!” என்று பயப்பட்டு தேவர்கள் அங்கு மிங்கும் கால் தடுமாறிச் சிதறி ஓடும்படியாக நரசிங்கவுருக்கொண்டு எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேழ்குன்றம்.
அஃது எப்படிப்பட்ட இடமென்னில்; மூங்கில் புதர்களினின்றும் புலிகள் பெருவழியிலே வந்து சேர்ந்து “இங்கு யானைகள் நடமாடின அடையாள முண்டோ?” என்று பார்க்கின்றனவாம். யானைகளை யடித்துத் தின்பதற்காக அவை உலாவின இடங்களைத் தேடித் திரிகின்ற புலிகள் நிறைந்ததாம் அத் தலம். ….. ….. … …. ….. ….. …. (6)
English Translation
Seeing the burning red eyes, bright wide gaping mouth and sharp bright teeth, the celestials ran helter-skelter, wondering,”What farin is this?” The Lord resides in Singavel-Kundram where tigers peer through Bamboo thickets looking for signs to the way the elephants went grazing.
