(1014)

(1014)

முனைத்த சீற்றம் விண்சுடப்போய் மூவுலகும் பிறவும் *

அனைத்துமஞ்ச வாளரியா யிருந்த வம்மான திடம் *

கனைத்த தீயும் கல்லுமல்லா வில்லுடை வேடருமாய் *

தினைத்தனையம் செல்லவொண்ணாச் சிங்கவேள் குன்றமே.

பதவுரை

முனைத்த சீற்றம்

மிக்க கோபமானது

போய்

வளர்ந்து சென்று

விண் சுட

ஆகாயத்தைக் கொளுத்தவும்

மூ உலகும்பிறவும்

மூன்று லோகங்களும் மற்றுமுள்ளவைகளும்

அனைத்தும்

எல்லாம்

அஞ்ச

பயப்படவும்

ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம்:-

கனைத்த தீயும்

ஒலி செய்கின்ற நெருப்பும்

கல்லும்

(அந்த நெருப்பினால் வேகின்ற) கற்களும்

அல்லா வில் உடை வேடரும் ஆய்

உலகத்தில் கண்டறியாத விற்களையுடைய வேடர்களும் நிறைந்திருப்பதனாலே

தினை தனையும் செல்ல ஒண்ணா

க்ஷணகாலமும் கிட்ட வொண்ணாததான

சிங்கவேள்குன்றம்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

#1014

முனைத்த சீற்றம் விண் சுடப் போய், மூவுலகும் பிறவும்
அனைத்தும் அஞ்ச, ஆள் அரி ஆய் இருந்த அம்மானது இடம்
கனைத்த தீயும் கல்லும், அல்லா வில் உடை வேடரும் ஆய்,
தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் சிங்கவேழ்குன்றமே.  (1-7-7)

        ***- (முனைத்தசீற்றம்.) நரசிங்கமூர்த்தி இரணியன் மீது கொண்ட கோபம் அளவற்றிருந்ததனால் அந்தக் கோபாக்நி  மேலுலகமளவும் போய்ப் பரவி எங்கும் தஹிக்கப்புகவே ஸர்வலோக ஸம்ஹாரஸமயம் பிறந்துவிட்ட தென்று மூவுலகத்திலுள்ளோரும் அஞ்சி நடுங்கும்படியா யிருந்ததாம். அப்படிப்பட்ட உக்ர நரஸிம்ஹன் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேள் குன்றம்.

        அவ்விடம் எப்படிப்பட்டது?; எரிகிறபோதுண்டான வெடுவெடென்கிற ஓசையையுடைத்தான நெருப்பும், அந்த நெருப்பிலே வைக்கோல் போர்போலே வேகின்ற கல்லுகளும், இவற்றிற்காட்டிலும் கொடியவர்களான கையும் வில்லுமாய்த் திரிகின்ற வேடர்களும் அங்கு நிறைந்திருப்பதனாலே ஒரு நொடிப் பொழுதும் சென்று கிட்ட முடியாத தலமாம் அது. – “உகவாதார்க்குக் கண்ணாலே காணலாம்படி சென்று கிட்டிக்கண்ணெச்சில் பட வொண்ணாதபடி யிருந்த தேசமாயிற்று” என்ற பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸுக்தி இங்கு நோக்கத் தக்கது.

        தினைத்தனையும் = தினை என்று ஒரு சிறிய தானியத்திற்குப் பெயர் ; அவ்வளவும் என்றது – ஸ்வல்பகாலமும் என்றபடி. 1. “எட்டனைப்போது” என்ற விடத்து எள் என்ற தானியத்தை யெடுத்துக்காட்டின தொக்கும் இது. 1. திருநெடுந்தாண்டகம் – 11…. (7)

English Translation

The rage of the man-lion reaching the sky, the three worlds and all else stood in fear. His abode is Singavel-Kundram where fire; rocks and bow wielding hunters make it impossible to reach the temple.

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top