(989)
கடம்சூழ்க்கரியும்பரிமாவும் ஒலிமாந்தேரும்காலாளும்*
உடன்சூழ்ந்தெழுந்தகடியிலங்கை பொடியவடிவாய்ச்சரம்துரந்தான்*
இடம்சூழ்ந்தெங்குமிருவிசும்பில் இமையோர்வணங்கமணம்கமழும்*
தடம்சூழ்ந்தெங்குமழகாய சாளக்கிராமமடைநெஞ்சே!
பதவுரை
| கடம் சூழ் கரியும் |
– |
மதஜலத்தையுடைய யானைகளும் |
| பரிமாவும் |
– |
குதிரைகளும் |
| ஒலி மா தேரும் |
– |
ஒலியையுடைய மஹாரதங்களும் |
| காலாளும் |
– |
காலாட்களும் |
| உடன் சூழ்ந்து |
– |
ஒன்றாகத் திரண்டு |
| எழுந்த |
– |
கிளர்ந்து தோற்றின |
| கடி இலங்கை |
– |
அரணையுடைத்தான லங்கை |
| பொடி ஆ |
– |
பொடிபடும்படியாக, |
| வடி வாய் |
– |
கூர்மையான வாயையுடைய |
| சரம் |
– |
அம்புகளை |
| துரந்தான் |
– |
பிரயோகித்தவனான இராமபிரான் (எழுந்தருளியிருக்குமிடமான) |
|
(சாளக்கிராமம் அடைநெஞ்சே( |
||
|
(அது எப்படிப்பட்டதென்றால்( |
||
| இரு விசும்பில் இமையோர் |
– |
விசாலமான ஸ்வர்க்கத்திலுள்ள தேவர்கள் |
| இடம் எங்கும் சூழ்ந்துவணங்க |
– |
பூமியெங்கும் வந்துபரவி ஆச்ரயிக்கத்தக்கதாய் |
| மணம் கமழும் தடம் சூழ்ந்து |
– |
புஷ்பவாஸனைகள் வீசுகின்ற தடாகங்களாலே சூழப்பட்டு |
| எங்கும் அழகுஆய |
– |
எல்லாப்பக்கங்களிலும் அழகையுடைத்தாயிருக்கிற |
|
சாளக்கிராமம்-* |
||
#989
கடம் சூழ் கரியும் பரிமாவும் * ஒலி மாத்தேரும் காலாளும்*
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை * பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான் **
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் * இமையோர் வணங்க மணம் கமழும் *
தடம் சூழ்ந்து எங்கும் அழகாய * சாளக்கிராமம் அடை நெஞ்சே! —-(1-5-2)
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** (கடஞ்சூழ்கரியும்.) நெஞ்சே! சாளக்கிராமத்தைச் சென்று சேர்; அத்திவ்யதேசம் யாருடையது? — கடஞ்சூழ்கரியும் பரிமாவு மொலிமாந்தேருங் காலாளுமுடன் சூழ்ந்தெழுந்த கடியிலங்கை பொடியாவடிவாய்ச் சரந்துரந்த பெருமானுடையது;- மதஜலத்தையுடையனவாய் மலைகள் வடிவெடுத்து நடந்தாற் போன்றுள்ள யானைத்திரள்களும், குதிரைத்திரள்களும், கோஷத்தை யுடைய பெரிய தேர்களும் காலாட்களும் ஆகிய இவையெல்லாம் ஒன்றாகத் திரண்டு பெரியகிளர்ச்சியோடே தோற்றின இலங்கை சுடுகாடாம்படியாகத் தீக்ஷ்ணமான அம்புகளைப் பிரயோகித்த சக்ரவர்த்தி திருமகன் எழுந்தருளி யிருக்கு மிடமென்கை.
தேவர்களும் இங்கு வந்து ஸேவிக்கும்படியாய் அழகான ஸந்நிவேசங்களை யுடையது என்கிறார் பின்னடிகளில் நிலத்தில் எவ்வளவு அவகாசமுண்டோ அவ்வளவும் வந்து சூழ்ந்துகொண்டு சுவர்க்கத்திலுள்ள தேவர்கள் வணங்கப் பெற்றதும், பரிமளம் வீசுகின்ற பொய்கைகள் சூழ்ந்ததும் அழகியதுமான சாளக்கிராமத்தை நெஞ்சே ! அடை . . …. ….. …… (2)
English Translation
The trumpeting elephants, horses, chariots and footmen, stormed the bastion Lanka and reduced it to pulver with sharp arrows. He resides in the beautiful lakes of Saligrama with fragrance wafting all around. Gods in the wide sky come to worship Him. Go to him in Saligrama, O Heart!
