(990)

(990)

உலவுதிரையும்குலவரையும் ஊழிமுதலாவெண்திக்கும்*

நிலவும்சுடருமிருளுமாய் நின்றான்வென்றிவிறலாழி

வலவன், வானோர்த்தம்பெருமான் மருவாவரக்கர்க்கெஞ்ஞான்றும்

சலவன், சலம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே!

பதவுரை

உலவு திரையும்

உலாவுகின்ற அலைகளையுடைய கடலும்
குலம் வரையும்

குலபர்வதங்களும்
ஊழி முதலா எண்திக்கும்

காலம் முதலாகவுள்ள ஸகலபதார் த்தங்களும் எட்டுத்திசைகளும்
நிலவும் சுடரும் இருளும் ஆய் நின்றான்

சந்திரனும் ஸூர்யனும் இருட்டும் ஆகிய இப்பொருள்களுக்கெல்லாம் அந்தர்யாமியாயிருப்பவனும்
வென்றி விறல்

வெற்றியையும் மிடுக்கையுமுடைய
ஆழி வலவன்

திருவாழியை வலத் திருக்கையிலே யுடையவனும்
வானோர் தம் பெருமான்

தேவாதிதேவனும்
மருவா அரக்கர்க்கு

(தன்னை) ஆச்ரயியாத ராக்ஷஸர்கள் விஷயத்தில்
எஞ்ஞான்றும் சலவன்

எப்போதும் நன்மை செய்யாதவனுமாகிய எம்பெருமான் (எழுந்தருளியிருக்குமிடமாய்)
சலம் சூழ்ந்து அழகு ஆய

நீர் நிலங்களால் சூழப்பட்டு அழகு பொருந்தியதான

சாளக்கிராமம் நெஞ்சே!  அடை.

#990

உலவு திரையும் குல வரையும்* ஊழி முதலா எண் திக்கும் *

நிலவும் சுடரும் இருளும் ஆய் நின்றான் * வென்றி விறல் ஆழி வலவன் **

வானோர் தம் பெருமான் * மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன் *

சலம் சூழ்ந்து அழகாய* சாளக்கிராமம் அடை நெஞ்சே! —-(1-5-3)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

* * * [உலவுதிரையும்.) $ பண்டைநான் மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும், பிண்டமாய்விரிந்த பிறங்கொளியனலும் பெருகிய புனலொடு நிலனும், கொண்டல் மாருதமும் குரைகடலேழும் ஏழுமாமலைகளும் விசும்பும், அண்டமுந்தானாய் நின்ற வெம்பெருமான் ) என்னுமா போலே ஜகத்ஸ்வரூபியாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறார் ஒன்றரையடிக ளால். ***” = “ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம.” என்று சுருதியும் சொல்லிற்று. ஸகல பதார்த்தங்களையும் சரீரமாகவுடையன் என்றபடி. வென்றி விறலாழிவலவன் என்பதனால் அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹ முடைமை சொல்லுகிறது. அடியவர்களைக் காத்தருள்வதற்கு உறுப்பான ஸ்ரீ ஸுதர்சநாயுதத்தை வலத்திருக்கையிலே யுடையவன். வென்றி விறலாழி = எங்குப் போனாலும் ஜயத்துடன் திரும்பி வருவது ; அதற்கு அநுகூலமான பராக்ரமமுடையது.

மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன் = பகவத் பாகவத விஷயமென் றால் பொறுக்கமாட்டாத ஆஸுரப்ரக்ருதிகளுக்கு எப்போதும் தீங்கு செய்பவன். சலத்தையுடையவன் சலவன்; சலம் – தீராக்கோபம், வஞ்சம், பொய்.

நல்லார்க்கு மெய்யனாய் தீயார்க்குப் பொய்யனாயிருக்கும் எம்பெருமானுடைய சாளக்கிராமத்தை நெஞ்சே! அடைந்திடு ….(3)

$ பெரிய திருமொழி 5-7-1.

English Translation

The lashing of the ocean, the ranges of the mountains, the passages of time, the directions of the Quarters, the Sun, the Moon and darkness, –all these are the Lord’s manifestations. He bears a radiant discus, he is the Lord of Gods, he is the merciless towards unyielding Rakshasas. Go to Him in Saligrama, O Heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top