(960)

(960)

துடிகொள் நுண்ணிடைச்சுரிகுழல் துளங்கெயிற் றிளங்கொடிதிறத்து, ஆயர்

இடிகொள்வெங்குரலினவிடையடர்த்தவன்  இருந்தநல்லிமயத்து,

கடிகொள்வேங்கையின்நறுமலரமளியின் மணியறைமிசைவேழம்,

பிடியினோடுவண்டிசைசொலத்துயில்கொளும் பிரிதிசென்றடைநெஞ்சே.

 

பதவுரை

துடி கொள் நுண் இடை

உடுக்கைபோன்ற ஸூக்ஷ்மமான இடையையும்

சுரிகுழல்

சுருண்ட கூந்தலையும்

துளங்கு எயிறு

பளபளவென்று விளங்குகின்ற பற்களையும் உடையவளாய்

இள கொடி திறத்து

இளங்கொடி போன்றவளான நப்பிள்ளைப் பிராட்டிக்காக,

ஆயர்

இடையர்களுடையவையாய்

இடி கொள்வெம் குரல் இனம் விடை

இடிபோல் வெவ்விய குரலை யுடைவையாய் கூட்டமாக வந்தவையான ஏழு ரிஷபங்களை

அடர்த்தவன்

வலியடக்கின பெருமான்

இருந்த

எழுந்தருளியிருக்கப் பெற்ற

நல் இமயத்து

நல்ல இமயமலையினுள்,-

வண்டு இசை சொல

வண்டுகள் இசைபாடா நிற்க

மணி அறை மிசை

இந்திரநீல மணிமயமான பாறைகளின் மேலே

கடிகொள் வேள்கையின் நறுமலர் அமளியில்

வேங்கைமரத்தினது மணம் மிக்க புஷ்பமயமான படுக்கையிலே

வேழம்

யானையானது

பிடியினோடு

தன் பேடையோடுகூட

துயில்கொளும்

உறங்குமிடமான

பிரிதி

திருப்பிரிதியை

சென்று அடை

சென்று சேர்வாயாக.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை


துடிகொள் நுண்ணிடைச் சுரிகுழல் தங்கெயிற்றினங்கொடி திறத்து* ஆயர்

இடிகொள் வெங்குர லினவிடை யடர்த்தவன் இருந்த நலிமயத்து *

கடிகொள் வேங்கையின் நறுமல ரமளியின் மணியறைமிசை வேழம் *

பிடியினோடு வண்டிசைசொலத் துயில்கொளும் பிரிதி சென்றடை நெஞ்சே!


[துடிகொள்நுண்ணிடை.) ஶீதாபிராட்டிக்காக இலங்கையைப் பாழ் படுத்தினமையைச் சொன்னார் கீழ்ப்பாட்டில். நப்பின்னைப் பிராட்டிக்காகச் செய்ததொரு செயலைச் சொல்லுகிறார் இதில்,

கும்பனென்னும் இடையர் தலைவனது மகளும், நீளாதேவியின் அம்ச மாகப் பிறந்ததனால் நீளா என்ற பெயரால் வழங்கப்பட்டு வருபவளுமான நப்பின்னைப்பிராட்டியை மணஞ்செய்துகொள்ளுதற்காக அவள் தந்தை கன்யாசுல்கமாகக் குறித்தபடி யாவர்க்கும் அடங்காத அஸுராவேசம் பெற்ற ஏழு எருதுகளையும் கண்ணபிரான் ஏழு திருவுருக்கொண்டு சென்று வலியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்துகொண்டனன் என்ற வரலாறு முன்னடிகளில் அடங்கியுள்ளது.

முதலடி முழுமையும் நப்பின்னைப்பிராட்டியின் அவயவஸௌந்தரி யத்தை வருணிப்பது. ‘அஸுராவேசம் பெற்ற ரிஷபங்களோடு எங்கனே நாம் போர் செய்வது ‘ என்று பின்வாங்காமல் உயிரைப்புல்லாக நினைத்து அவ்வெருதுகளோடு போர்செய்ய மேல்விழப்பண்ணவல்ல சிறந்த அழகு பெற்றவளாம் நம்பின்னை யென்பவள்.’ இவளுடைய திருமேனி நமக்குக் கிடைக்கு மாகில் என்ன அருந்தொழில்தான் செய்யக்கூடாது’ என்று துணிந்து விடைகளின் மேலே விழுந்தானாயிற்று.

மாதர்களின் சிற்றிடைக்கு உடுக்கையை உவமை கூறுதல் கவிமரபு. ”இளங்கொடி போன்ற நப்பின்னை திறத்து” என்னாது, “இளங்கொடி திறத்து” என்று அபேதமாகச் சொன்னது அப்பிராட்டியின் திருமேனியிலுள்ள ஸௌகுமார்யத்தை நன்கு விளக்கும்; ‘தாமரை போன்ற திருவடி’ என்ன வேண்டுமிடத்து,* “ தாவி வையங்கொண்ட தடந்தாமரைகட்கே” என்றருளிச்செய்தது காண்க.

இளங்கொடி திறத்து = கோல்தேடியோடுங் கொழுந்து போன்ற நப்பின்னைக்காக என்றபடி. ஆயரிடிகொள் வெங்குரலினவிடை =ஆயர் என்றவிது இனவிடையில் அந்வயிக்கும்; ஆயர்களுடைய இனவிடைகளை அடர்த்தவன் என்கை. இடியிடித்தாற்போல் பயங்கரமாக இரைத்துக்கொண்டிருந்ததனால் இடிகொள்வெங்குரல் என அடைமொழி கொடுக்கப்பட்டது. பிரதிபந்தகங்களைப் போக்கி அபிமத விஷயத்தோடே புணர்ந்த பெருமான் நம்போன்ற அபிமதர்களையுஞ் சேர்த்துக்கொள்வதற்காக எழுந்தருளியிருக்கிற இமயயின் கண்

அழகிய பாறைகளின் மீது வேங்கை மலர்கள் விசேஷமாக உதிர்ந்து படுக்கை விரித்தாற்போலிராநிற்க, அதன்மீது யானையானது தன் பேடையோடு கிடந்துறங்குகைக்குப் பாங்காக வண்டுகள் கர்ணாமிருதமாக இன்னிசை பாடப் பெற்ற பிரிதியைச் சென்று சேர் நெஞ்சமே!.

நப்பின்னைப்பிராட்டியோடே பரமரஶிகன் ரமிக்குமிடமாகையாலே அங்குள்ள திர்யக்ஜந்துக்களும் ச்ருங்கார ரஸத்திலே நோக்காயிருக்கிறபடி. அமளி – படுக்கை. மணியறை என்பதற்கு மணிமயமான பாறை என்றும், அழகிய பாறை என்றும் பொருள் கொள்ளலாம். பிடி – யானைப் பேடை. (ங)

* திருவாய்மொழி 6-9-9.


 

English Translation

Dumb-bell waisted Lady, curly-haired and pearly-smiling tender Nappinnai Dame, –For her sake he subdued seven mighty bulls in fight, who’s Resident of Himavan peaks. On the flowery cushion showered by the fragrant Kongai over a gem-rocky bed, Making elephant-pairs sleep to the hum of bees in piriti, –O, Go to, my heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top