(955)

(955)

கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை,

பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெருநிலத்தாருயிர்க்கெல்லாம்,

செற்றமேவேண்டித்திரிதருவேன் தவிர்ந்தேன் செல்கதிக்குய்யுமாறெண்ணி,

நற்றுணையாகப்பற்றினேன் அடியேன் நாராயணாவென்னும்நாமம்.

 

பதவுரை

கலைகள்

சாஸ்த்ரங்களை

கற்றிலேன்

கற்றறிந்தவனல்லேன்;

ஐம்புலன் கருதும் கருத்துள்

பஞ்சேந்திரியங்கள் விரும்புகின்ற விஷயங்களிலே

மனதைத் திருத்தினேன்

நெஞ்சைச் செலுத்திக் கிடந்தேன்;

அதனால்

இப்படியிருந்ததனாலே

பேதையேன்

அவிவேகியான நான்

நன்மை பெற்றிலேன்

ஒரு நன்மையும் பெறாதவனாயினேன்;

பெரு நிலத்து ஆர்

பெரிய இப்பூமியிலேயுள்ள

உயிர்க்கு எல்லாம்

பிராணிகளுக்கு எல்லாம்

செற்றமே வேண்டி

தீங்கு செய்வதையே புருஷார்த்தமாகக்கொண்டு

திரிதருவேன்

(அதுவே போதுபோக்காகத்)திரிந்து கொண்டிருந்தேன்,

(இப்படி நெடுங்காலம் கெட்டுப் போனேனாகிலும், இன்று பகவத் கடாக்ஷத்தாலே)-

தவிர்ந்தேன்

இக்கொடுமைகளெல்லாம் தவிரப்பெற்றேன்;

அடியேன்

தாஸனாகப் பெற்ற நான்

செல்கதிக்கு உய்யும் ஆறு எண்ணி

செல்ல வேண்டிய நல்வழியை நண்ணி உஜ்ஜீவிக்கும்படியைச் சிந்தித்து

நாராயணா என்னும் நாமம்

நாராயணா நாமத்தை

நல் துணை ஆக பற்றினேன்

நல்ல ஸஹாயமாகக் கைக்கொண்டேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை


** * – (கற்றிலேன் கலைகள் ] ஓர் ஆசிரியன் திருவடிகளிலே சென்று பணிந்து குனிந்து கேட்டவனல்லேனாகையாலே ஒரு சாஸ்த்ர ஞானமும் எனக்கில்லை ; நெஞ்சை ஒரு நொடிப்பொழுதாகிலும் நல்விஷயத்திலே செலுத்தின னல்லேன் ; செவி வாய் கண் மூக்கு உடலென்னுமைம்புலன்கள் விரும்புகின்ற சப்தாதி விஷயங்களிலேயே நெஞ்சைச் செலுத்திப் போந்தவனாதலால் அறிவு கேடனாய் ஹிதசிந்தை பண்ணப்பெற்றிலேன்; எனக்கொரு நன்மை ஸம்பாதியாதவளவேயன்றி உலகத்திலுள்ள பிராணிகளையெல்லாம் ஹிம்ஸிக்கும் வழியைச் சிந்தித்தும் திரிந்தேன்; எல்லாரையும் ஹிம்ஸித்து நான் வயிறு வளர்க்கும் வழியையே நோக்கினேன். இப்படி நான் இருந்தது நேற்றுவரையில் ; இன்று இந்த நிலைமைகளெல்லாம் தவிர்ந்து நல்வீடு சேர்ந்து உஜ்ஜீவிக்க வேண்டிய வழியைச் சிந்தித்து, இக்கரையில் நின்றும் அக்கரையிலே கொண்டு தள்ள வல்லதொரு திருநாமத்தைத் துணையாகப் பற்றினேன்………………………………………………………………………………………………………………………………………………..……. (௮)


 

English Translation

I had no schooling, I let my senses rule and to lead my heart everywhere. I lost a good life, O File-to-me wretch; I roamed like death on all creatures. I put an end to my roaming everywhere seeking a life of redemption. I found the perfect Mantra for comfort, Narayana is the good name!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top