(814)

(814)

நன்றிருந்து யோகநீதி நண்ணுவார்கள் சிந்தையுள்

சென்றிருந்து தீவினைகள் தீர்த்ததேவ தேவனே

குன்றிருந்த மாடநீடு பாடகத்து மூரகத்தும்

நின்றிருந்து வெஃகணைக்கி டந்ததென்ன நீர்மையே.

பதவுரை

நன்று இருந்து

–

(யோகப்பயிற்சிக்கு உரிய ஆஸனத்திலே முறைப்படி நிலைத்திருந்து
யோகம் நீதி

–

யோகமாகியு உபாயத்தை
நண்ணுவார்கள்

–

ஸாதிக்கின்ற யோகிகளுடைய
சிந்தையுள்

–

ஹ்ருதயத்தினுள்ளே
சென்று இருந்து

–

ப்ரவேசித்திருந்து
ஊரகத்தும்

–

திருவூரகத்திலும்
வெஃகனை

–

திருவெஃகாவிலும்
தீ வினைகள் தீர்த்த

–

(அவர்களுடைய) தீ வினைகளைத் தொலைத்தருளின
தேவ தேவனே!

–

தேவாதி தேவனே!
குன்று இருந்த நீடு மாடம்

–

மலைகளைக் கொணர்ந்து சேர்த்து வைத்தாற்போன்றிரா நின்ற ஓங்கின மாடங்களையுடைய
பாடகத்தும்

–

திருப்பாடகத்திலும்
இருந்து நின்று கிடந்தது

–

(க்ரமேண) வீற்றிருக்க திருக்கோலமாகவும் நின்ற திருக்கோலமாகவும் சயனத்திருக்கோலமாகவும் எழுந்தருளியிருப்பது
என்ன நீர்மை

–

என்ன ஸௌஹார்த்தமோ!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தேவரீர் ஸௌகுமார்யத்தைக் கணிசியாமல் பக்தசிகாமணியாகிய ப்ரஹ்லாதன் திறத்திலுள்ள வாத்ஸல்யமே காரணமாக முரட்டவதாரமெடுத்து இரணியனை அழியச் செய்தது பொருந்தலாம்; ஸர்வப்காரத்தாலும் விமுகரான ஸம்ஸாரிகளுடைய அபிமுக்யத்தை எதிர்பார்த்து உம்முடைய மேன்மையைப் பாராதே கோயில்களிலே நிற்பது இருப்பது கிடப்பதாகிற விது அந்தோ! என்ன நீர்மை! என்று ஈடுபடுகிறார்.

ஊரகம் – ஆதிசேஷனென்னும் பொருளையுடைய ** மென்ற வடசெல் ஊரகமென்று நீண்டு கிடக்கிறது; பெருமாள்கோயிலில் உலகளந்த பெருமாள் ஸந்நிதி ஊரகமென வழங்கும். அங்கே திருவனந்தாழ்வானுடைய ஸரப்ரஸாதித்வம் ப்ரஸித்தம். வெஃகணை- வேகவணை’ என்பது வெஃகணையென்று கிடக்கிறது. **  என்று வடசொல் வழக்கம்; ஸ்ரீயதோக்தகாரி ஸந்நிதி

English Translation

You reside in thoughts of all to take the Yoga path to you. O Lord of Gods, you go to them and clear the path to come to you. O Lord you stand in Padakam, you sit in ancient Urakam, you recline in Vehkanai with mansions all around, O Lord!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top