(814)
நன்றிருந்து யோகநீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்றிருந்து தீவினைகள் தீர்த்ததேவ தேவனே
குன்றிருந்த மாடநீடு பாடகத்து மூரகத்தும்
நின்றிருந்து வெஃகணைக்கி டந்ததென்ன நீர்மையே.
பதவுரை
| நன்று இருந்து |
– |
(யோகப்பயிற்சிக்கு உரிய ஆஸனத்திலே முறைப்படி நிலைத்திருந்து |
| யோகம் நீதி |
– |
யோகமாகியு உபாயத்தை |
| நண்ணுவார்கள் |
– |
ஸாதிக்கின்ற யோகிகளுடைய |
| சிந்தையுள் |
– |
ஹ்ருதயத்தினுள்ளே |
| சென்று இருந்து |
– |
ப்ரவேசித்திருந்து |
| ஊரகத்தும் |
– |
திருவூரகத்திலும் |
| வெஃகனை |
– |
திருவெஃகாவிலும் |
| தீ வினைகள் தீர்த்த |
– |
(அவர்களுடைய) தீ வினைகளைத் தொலைத்தருளின |
| தேவ தேவனே! |
– |
தேவாதி தேவனே! |
| குன்று இருந்த நீடு மாடம் |
– |
மலைகளைக் கொணர்ந்து சேர்த்து வைத்தாற்போன்றிரா நின்ற ஓங்கின மாடங்களையுடைய |
| பாடகத்தும் |
– |
திருப்பாடகத்திலும் |
| இருந்து நின்று கிடந்தது |
– |
(க்ரமேண) வீற்றிருக்க திருக்கோலமாகவும் நின்ற திருக்கோலமாகவும் சயனத்திருக்கோலமாகவும் எழுந்தருளியிருப்பது |
| என்ன நீர்மை |
– |
என்ன ஸௌஹார்த்தமோ! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தேவரீர் ஸௌகுமார்யத்தைக் கணிசியாமல் பக்தசிகாமணியாகிய ப்ரஹ்லாதன் திறத்திலுள்ள வாத்ஸல்யமே காரணமாக முரட்டவதாரமெடுத்து இரணியனை அழியச் செய்தது பொருந்தலாம்; ஸர்வப்காரத்தாலும் விமுகரான ஸம்ஸாரிகளுடைய அபிமுக்யத்தை எதிர்பார்த்து உம்முடைய மேன்மையைப் பாராதே கோயில்களிலே நிற்பது இருப்பது கிடப்பதாகிற விது அந்தோ! என்ன நீர்மை! என்று ஈடுபடுகிறார்.
ஊரகம் – ஆதிசேஷனென்னும் பொருளையுடைய ** மென்ற வடசெல் ஊரகமென்று நீண்டு கிடக்கிறது; பெருமாள்கோயிலில் உலகளந்த பெருமாள் ஸந்நிதி ஊரகமென வழங்கும். அங்கே திருவனந்தாழ்வானுடைய ஸரப்ரஸாதித்வம் ப்ரஸித்தம். வெஃகணை- வேகவணை’ என்பது வெஃகணையென்று கிடக்கிறது. ** என்று வடசொல் வழக்கம்; ஸ்ரீயதோக்தகாரி ஸந்நிதி
English Translation
You reside in thoughts of all to take the Yoga path to you. O Lord of Gods, you go to them and clear the path to come to you. O Lord you stand in Padakam, you sit in ancient Urakam, you recline in Vehkanai with mansions all around, O Lord!
