(813)
கரண்டமாடு பொய்கையுள்க ரும்பனைப்பெ ரும்பழம்
புரண்டுவீழ வாளைபாய்கு றுங்குடிநெ டுந்தகாய்
திரண்டதோளி ரணியஞ்சி னங்கொளாக மொன்றையும்
இரண்டுகூறு செய்துகந்த சிங்கமென்ப.
பதவுரை
கரண்டம் ஆடு பொய்கையுள் |
– |
நீர்க்காக்கைகள் உலாவுகின்ற பொய்கையிலே |
கரு பனை பெரு பழம் |
– |
கரிய பெரிய பனம்பழங்களானவை |
புரண்டு வீழ |
– |
விழுந்துபுரள (அவற்றைக் கண்டு நீர்க்காக்கைகளாக ப்ரமித்து அஞ்சின) |
வாளை |
– |
மீன்கள் |
பாய் |
– |
துள்ளியோடி யொனிக்கின்ற |
குறுங்குடி |
– |
திருக்குறுக்குடியிலே எழுந்தருளியிருக்கிற |
நெடுந்தகாய் |
– |
மஹாதுபாவனே! |
திரண்ட தோள் |
– |
திரண்டதோள்களையுடையவனான |
இரணியன் |
– |
ஹிரண்யனுடைய |
சினம்கொள் ஆகம் ஒன்றை |
– |
மாத்ஸர்யம் விளங்குகிற கடுமையின் அத்விதீயமான சரீரத்தை |
இரண்டு கூறு செய்து |
– |
இருபிளவாகப் பிளந்து |
உகந்த |
– |
மகிழ்ந்த |
சிங்கம் என்பது |
– |
நரஸிம்ஹ மூர்த்தியென்று சொல்வது |
உன்னையே |
– |
உன்னையோ? (ஸுகுமாரனானவுன்னை முரட்டுச் சிங்கமென்னத்தகுமோ?.) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நீர்க்காக்கைகள் ஸஞ்சரிக்கும் பொய்கையிலே பெரிய கரிய பனம்பழங்கள் விழுந்து புரள, அவற்றை நீர்க்காக்கையாக ப்ரமித்த வாளைகளானவை அஞ்சிப் பாயும்படியை அருளிச்செய்கிறார் ஒன்றரையடிகளில். மெய்யான நீர்க்காக்கையைக் கண்டு பயப்படாமல் போலியானதொன்றைக் கண்டு பயப்பட்டதாக அருளிச்செய்தவிது- திருக்குறுங்குடியிலுள்ளார் நம்பிபக்களில் ப்ரேமத்தின் மிகுதியால்* அஸ்தாநே பயசங்கை பண்ணும்படிக்கு ஸூசகம் என்க. நெடுந்தகாய்- ‘நெடுந்தகை’ என்பதன் விளி; பெருந்தன்மை பொருந்தினவனே! என்றபடி.
இப்போதும் திருக்குறுங்குடிநம்பி ஸந்நிதியிலுள்ள புஷ்கரிணிக்குக் கரண்டமாடு பொய்கை என்று திருநாமம் வழங்கி வருதலும், ஆழ்வார் “கரும்பனைப் பெரும்பழம்” என்று பணித்தது பழுதாகாமைக்காக அப்புஷ்கரிணியின் கரையில் ஒரு திருப்பனைமரம் நம்பியின் கடாக்ஷமேதாரகமாக நாளைக்கும் வளர்ந்து வருதலும் அறியத்தக்கன. சினம் என்று விம்முதலுக்கும் வாசகமாகையாலே, சினங்கொள் ஆகம்- விம்ம வளர்ந்த சரீரம் என்ற என்றலுமாம். (சுஉ)
English Translation
O Lord in old Kurungudi beside a lake with.Valai-fish! The water-birds do stand-on-1, the Palmyra does roll its fruit. The strongly built Hiranya with rage that filled up all his frame, was torn to two by Man-lion, O Lord to tell me, wasn’t it you?