(761)

(761)

தன்னுளேதி ரைத்தெழும் தரங்கவெண்த டங்கடல்

தன்னுளேதி ரைத்தெழுந் தடங்குகின்ற தன்மைபோல்

நின்னுளேபி றந்திறந்து நிற்பவும் திரிபவும்

நின்னுளேய டங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே.

பதவுரை

தன்னுள்ளே திரைத்து

தன்னிலே கிளர்ந்து
எழும்

பரவுகின்ற
தரங்கம்

அலைகளையுடைத்தாய்
வெண்தடம்

வெளுத்த ப்ரதேசங்களையுடைத்தான
கடல்

கடலானது
தன்னுள்ளே  திரைத்து எழுந்து

தனக்குள்ளே கிளர்துலாவி
அடங்குகின்ற தன்மைபோல்

(மறுபடியும்) சாந்தமாவதுபோல.
நிற்பவும்

ஸ்தாவரஜங்கமரூபமான ப்ரபஞ்சமெல்லாம்
நின்னுள்ளே

உன் ஸ்வரூபத்துக்குள்ளே
பிறந்து

உத்பந்தமாய்
இறந்து

லாபமடைந்து
நின்னுள்ளே அடக்குகின்ற நீர்மை

(இப்படி) உன் ஸ்வரூபத்துக்குள்ளேயே ஒடுங்கிப்பொருகைக்கு உரிய தன்மை
நின் கண்ணே நின்றது

உன் பக்கலில் தான் உள்ளது.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “ ***” – அதர்வசிகையிலே “*** “  – என்று ஓதப்பட்டிருக்கிறது. ‘ஜகத்துக்கு எது உபாதாநகாரண்மோ அதுதான் உபாஸ்யம்’ என்பது அந்த ச்ருதிவாக்யத்தின் பொருள். அப்படி உபாதாக காரணத்வ ப்ரயுக்தமான ஆச்ரயணியத்துவமும் எம்பெருமானிடத்தே யுள்ளது என்கிறது இப்பாட்டு.

அலையெறிவு ஓய்ந்துகிடந்த கடலானது வாயுஸஞ்சாரத்தாலே எங்கும் அலையெறியப்பெற்று, மீண்டும் காற்று ஓய்ந்தவாறே அவ்வலையெறிவு அடங்கி, கடலானது சாந்தமாவதுபோல- என்பது முன்னடிகளின் கருத்து. பின்னாடிகளிற் கூறப்படும் அம்சத்திற்கு இது த்ருஷ்டாந்தம். தார்ஷ்டாந்திகத்தில் வாயுவின் ஸ்தானத்திலோ பகவத் ஸங்கல்பத்தைக்கொள்க. ஸங்கல்பமில்லாதபோது பகவத்ஸ்வரூபம் சாந்தமாயிருக்கும். ***- என்றாற்போன்ற ஸங்கல்பம் உண்டானவாறே ஸ்தாவர ஜங்கமாத்மகமான ப்ரபஞ்சங்கள் தோன்றுதலும் பின்பு அழிதலுமான அவஸ்தைகளையடைந்து கடைசியாக ***- என்றபடி எம்பெருமானளவிலே உயஸம்ஹ்ருதங்களாய்ப் போகிறபடியை சொல்லுகிறது. நிற்பவும் திரிபவும்- நிற்பனவும் திரிபனவு மென்றபடி.

English Translation

The tide that rises in the deep amid the foam and lasting waves is tide that subsides in the deep amid the foam and lasting waves. The standing and the moving ones are born and live and die in you, the way you keep them all within your corpus, o The Only God!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top