(760)

(760)

தாதுலாவு கொன்றைமாலை துன்னுசெஞ்ச டைச்சிவன்

நீதியால்வ ணங்குபாத நின்மலாநி லாயசீர்

வேதவாணர் கீதவேள்வி நீதியான வேள்வியார்

நீதியால் வணங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே

பதவுரை

தாது உலாவு

–

தாதுகள் உலாவுகின்ற
கொன்றை மாலை

–

கொன்னைப்பூ மாலையையும்
துன்னு செம் சடை

–

நெருங்கிய சிவந்த சடையையுடைய
சிவன்

–

ருத்ரன்
நீதியால்

–

முறைமைப்படி
வணங்கு

–

வணங்கப்பெற்ற
பாத

–

திருவடிகளையுடையவனே!
நின்மலா!

–

நிர்மலஸ்வரூபியே!
நிலாய சீர்வேதம் வாணர்

–

நிரம்பிய குணங்களையுடைய வைதிகர்களென்ன
கீதம்

–

வேள்வியார்

ஸாமகானம் மிகுந்த யஜ்ஞயாகங்களை நடத்துமவர்களென்ன

நீதி ஆன கேள்வி யார்

–

சிரமப்படி ச்ரவண மநநங்களை ச் செய்கிற மஹான்களென்ன (இவர்கள்)
நீதியால்

–

சாஸ்த்ரவிதிப்படி
வணங்கு நின்ற நீர்மை

–

வணங்குகைக்கு உரிய தன்மை.
நின் கண்ணே நின்றது

–

உன் பக்கலில்தான் உள்ளது.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ப்ரயோஜநாந்தரபார்களில் முதல்வனான சிவனும் அநந்யப்ரயோஜநரான வைதிகோத்தமர்களும் உன்னையே ஆச்ரயிக்கக் காண்கையாலே நீயே ஸர்வ ஸாச்ரயணீயன் என்கிறார்.

English Translation

The pollen-dusted Konrai garland-wearing mat-hair Lord Siva, does offer worship at thy feet. O Lord of spotless, lasting fame! The Veda learned Saman songs and sacrifice of proper chants do go to thee and thee alone, O Lord of worship-worthy feet!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top