(762)

(762)

சொல்லினால்தொ டர்ச்சிநீசொ லப்படும்பொ ருளும்நீ

சொல்லினால்சொ லப்படாது தோன்றுகின்ற சோதிநீ

சொல்லினால்ப டைக்கநீப டைக்கவந்து தோன்றினார்

சொல்லினால்சு ருங்கநின்கு ணங்கள்சொல்ல வல்லரே

பதவுரை

சொல்லினால்

வேதாந்த சாஸ்த்ர முகத்தாலே
தொடர்ச்சி நீ

(ஏகாந்திகளுக்கு) உறவை உண்டு பண்ணுமவன் நீ;
சொலப்படும் பொருளும் நீ

(சில புராணாதிகளில் ஆச்ரயணீயராகச்) சொல்லப்படுகிற தேவாதி பதார்த்தங்களுக்கு அந்ராத்மா நீ;
சொல்லரினால் சொல்லப்படாது தோன்றுகின்ற சோதி நீ சொல்லினால்

நீ காட்டிக்கொடுத்த வேதத்திற் சொல்லியபடி
படைக்க

(உலகங்களை) உண்டாக்குவதற்காக
நீ படைக்க வந்து தோன்றினார்

உன்னாலே ஸ்ருஷ்டிக்கப்பட்டு வந்து பிறந்தவர்களான ப்ரஹ்மாதிகன்
சொல்லினால்

சப்தங்களைக் கொண்டு
சுருங்க

சுருக்கமாவாவது
நின் குணங்கள்

உனது கல்யாண குணங்களை
சொல்லவல்லரே.

வர்ணிக்க சக்தர்களோ? (அல்லர்.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ப்ரஹ்ருத்ராதிகள் ஆச்ரயணீரல்லர்களென்றும் எம்பெருமானொருவனே ஆச்ரயணீயனென்றும் சொல்லிவிடலாமோ? வேதங்களில் ***-***- இத்யாதிகளான சில வாக்கியங்கள் சிலபாரம்யத்தையும்  ***- இத்யாதிகளான சில வாக்யங்கள் ப்ரஜாபதி பாரம்யத்தையும் சொல்லிக்கிடக்கின்றனவே; அவர்கள்- ஆச்ரயணீயராகத் தடையென்ன? என்று சிலர்க்கு சங்கையுண்டாக அந்த ப்ரஜாபதி பசுபதிகள் எம்பெருமானுக்குப் புத்ரபௌத்தர்களான வேதங்கள் முறையிடா நிற்பதுந் தவிர, அவர்கள் எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை விரிவாகப் பேசமாட்டாமையன்றிக்கே சுருக்கமாகவும் பேசமுடியாதவர்களென்று ப்ரமாண ப்ரஸித்தமாயிருக்க, இப்படி ஸ்ருஜ்யர்களாகவும் அஜ்ஞர்களாயுமுள்ள அவர்கள் ஆச்ரயணீயராகைக்கு ப்ரஸக்தியேயில்லை யென்றாயிற்று.

English Translation

The sweet delight of Vedic chants, the substance of the Vedas too; the radiance beyond the word are all thy manifestations. The great creator, lotus-born, –the four-head faced Brahma too, can hardly speak a word or two in praise of all thy glory-ways.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top