(722)

(722)

தாமரைமே லயனவனைப் படைத்தவனே தசரதன்றன்

மாமதலாய் மைதிலிதன் மணவாளா! வண்டினங்கள்

காமரங்க ளிசைபாடும் கணபுரத்தென் கருமணியே

ஏமருவும் சிலைவலவா! இராகவனே! தாலேலோ


பதவுரை

தாமரை மேல்

–

(திருநாபிக்) கமலத்திலே
அயன் அவனைபடைத்தவனே

–

பிரமனை உண்டாக்கினவனே!
தயரதன் தன் மாமதலாய்

–

தசரதனுடைய மூத்த குமாரனே!
மைதிலி தன் மணவாளா

–

பிராட்டிக்கு வல்லபனே!
வண்டு இனங்கள்

–

வண்டுகளின் கூட்டங்கள்
காமரங்கள் இசைபாடும்

–

காமரமென்னும் இசையைப் பாடப்பெற்ற
கணபுரத்து

–

திருக்கண்ணபுரத்திலெழுந்தருளி யிருக்கிற

என் கருமணியே

ஏ மருவும் சிலைவலவா

–

அம்புகள் பொருந்திய (ஸ்ரீசார்ங்கமென்னும்) வில்லை ஆளவல்லவனே

இராகவனே! தாலேலோ

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “தாமரைமேல் அயனவனைப் படைத்தவனே!” என்று சொல்லி “தயரதன்றன் மாமதலாய்!” என்று சொன்னவிது – ஸகல விபூதிக்கும் பிதாவாகிய நீ இவ்விபூதியில் ஒரு பிபீலிகாப்ராயனான தசரதனைப் பிதாவாகக் கொண்டு  ‘அவனுடைய பிள்ளை’ என்னும்படியாக பிறந்த அதிசயம் என்கொல் என வியந்தவாறாம்.

“ஏமருவுஞ்சிலை” = ஏ – எய்கையிலே, மருவும் – மூட்டாநின்ற, சிலை – வில் என்றும் பொருளாகலாம். ஆரேனும் பிடிக்கிலும் எய்கையிலே மூட்டும் வில் என்பது கருத்து. வெகு சாதுரியமாய் அடக்கி ஆளத்தக்க வில் – என்றவாறு இக்கருத்துத் தோன்றவே பெரியாழ்வாரும் சார்ங்கமென்னும் வில் ஆண்டான் றன்னை என்றருளிச் செய்தாரென்க.

English Translation

Sleep, O wielder-of-the-terrible-bow, Raghava, Talelo! O Dark-gem-Lord of Kannapuram where bumble-bees hum songs on Panns! You are the eldest son of the illustrious Dasaratha; you created Brahma on a lotus.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top