(688)

(688)

தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை

விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே

அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்

அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே

பதவுரை

விரை குழுவும்

–

பரிமளம் விஞ்சிய
மலர்

–

புஷ்பங்களையுடைய
பொழில் சூழ்

–

சோலைகளாலே சூழப்பட்ட
வித்துவக்கோடு

–

திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியிருக்கிற
அம்மானே

–

ஸ்வாமியே!
தரு துயரம்

–

(நீயே எனக்குத்) தந்த இத்துன்பத்தை
தடாய் ஏல்

–

நீயே களைந்திடா விட்டாலும்
உன் சரண் அல்லால் சரண் இல்லை

–

உனது திருவடிகளை யன்றி (எனக்கு) வேறு புகலில்லை;
ஈன்ற தாய்

–

பெற்ற தாயானவள்
அரிசினத்தால்

–

மிக்க கோபங்கொண்டு அதனால்
அகற்றிடினும்

–

(தனது குழந்தையை) வெறுத்துத் தள்ளினாலும்
மற்று

–

பின்பும்
அவள் தன் அருள் ஏ நினைந்து அழும்

–

அத்தாயினுடைய கருணையையே கருதி அழுகின்ற
குழவியதுவே

–

இளங்குழந்தையையே
போன்று இருந்தேன்

–

ஒத்திரா நின்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வித்துவக்கோடு என்பதற்கு – வித்வான்கள் கூடிய இடம் என்று காரணப் பொருள் கூறுவர்.  பிள்ளைப் பெருமாளையங்கார் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் “ திருவிற்றுவக்கோடு சேர்ந்தார் பிறவி கருவிற்றுவக் கோடுங்காண் “ என்றிருப்பதனால், வித்துவக் கோடு அல்ல;  விற்றுவக்கோடு என்பர் சிலர்.  அவ்விடத்திலும் “ திருவித்துவக்கோடு “ என்றே பாடமென்பர் பெரியோர்: இவ்வளவால் எதுகையின்பம் குன்றாது இத்திருமொழியின் ஈற்றுப் பாசுரத்திலும் இங்ஙனமே பாடமாம்.  இத்திவ்யதேசம் மலைநாட்டில் “ திருமிற்றக் கோடு “ என வழங்கப் படுகின்றது.

English Translation

O Lord of Vittuvakkodu, surrounded by fragrance-wafting flower groves! If you do not help me overcome the obstacles you place in my path, I have no refuge but you again; just as, even if a mother beats her child in a fit of anger, the child cries to be pacified by the mother alone.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top