(670)
மார னார்வரி வெஞ்சிலைக் காட்செய்யும்
பாரி னாரொடும் கூடுவ தில்லையான்
ஆர மார்வ னரங்க னனந்தன்நல்
நார ணன்நர காந்தகன் பித்தனே
பதவுரை
| மாரனார் |
– |
மன்மதனுடைய |
| வரிவெம் சிலைக்கு |
– |
அழகிய கொடிய வில்லுக்கு |
| ஆள் செய்யும் |
– |
ஆட்பட்டு (விஷய ப்ரவணராய்த்) திரிகிற |
| பாரினாரொடும் |
– |
(இப்) பூமியிலுள்ள ப்ராக்ருதர்களோடு |
|
யான் கூடுவது இல்லை-: |
||
| ஆரம் மார்வன் |
– |
முக்தாஹாரத்தைத் திருமார்பிலே அணிந்துள்ளவனாய் |
| அனந்தன் |
– |
அளவிடமுடியாத ஸ்வரூபஸ்வ பாவங்களையுடையவனாய் |
| நல் நாரணன் |
– |
ஸர்வ ஸ்வாமியாய் |
| நரக அந்தகன் |
– |
அடியவர்களை நரகத்தில் சேராதபடி காத்தருள்பவனான |
| அரங்கன் |
– |
ஸ்ரீரங்கநாதன் விஷயத்திலே |
| பித்தன் |
– |
மோஹமுடையனாயிரா நின்றேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நரகாந்தகன்-நரகாஸூரனைக் கொன்றவன் என்றுமாம்.
English Translation
Nor indeed can I be a subject under the sweet bow of the king-of-love Karma. I am mad for my jeweled Aranga, my eternal Lord Narayana, the destroyer of Hell.
