(518)

(518)

வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில் விசித்திரப்பட வீதிவாய்த்

தெள்ளிநாங்களி ழைத்தகோல மழித்தியாகிலும் உன்றன்மேல்

உள்ளமோடி யுருகலல்லால் உரோடமொன்று மிலோங்கண்டாய்

கள்ளமாதவா கேசவாஉன் முகத்தனகண்க ளல்லவே

பதவுரை

கள்ளம்

கபடச்செய்கைகளையுடைய
மாதவா

கண்ணபிரானே!
கேசவா

கேசவனே!

நாங்கள்’

வெள்ளை நுண் மணல் கொண்டு

வெளுத்துத் சிறுத்த மணல்களைக் கொண்டு
வீதியாய்

தெருவிலே
விசித்திரப்பட

(அனைவரும் கண்டு) ஆச்சாரியப்படும்படி
தெள்ளி இழைத்த

தெளிந்து கட்டின
சிற்றில்

சிற்றிலாகிற
கோலம்

கோலத்தை
அழித்தி ஆகிலும்

நீ அழித்தாயாகிலும், (அதற்காக)
உள்ளம்

(எங்களுடைய) நெஞ்சானது
ஓடி

உடைந்து
உருகல் அல்லால்

உருகுமத்தனை யொழிய
உன்தன்மேல்

உன்மேலே
உரோடம் ஒன்றும் இலோம்

துளியும் கோபமுடையோமல்லோம்’
உன்முகத்தன

உன்முகத்திலுள்ளவை
கண்கள் அல்லவே

கண்களன்றோ!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மன்மதன் துஷ்டசீல தேவதை யாகையாலே அவனுக்கு இறையும் நெஞ்சு கோணவொண்ணாதென்று அவன் வரும் வீதியைப் பாங்காக அலங்கரித்தற் பொருட்டு நிலாப்போல் வெளுத்த மணல்களைக் கொணர்ந்து, அவற்றை பருக்கைக் கற்களின் கலப்பில்லாமல் புடைத்து நாங்களிழைத்த இக்கோலத்தை நீ அழித்தபோதிலும், ஸர்வஸ்மாத்பரனானவன் இப்படியெல்லாம் செய்யப் பெறுவதே! ஈதென்ன ஸௌசீல்யம்!’ என்று நெஞ்சு உருகி நீராய்ப் போமித்தனையொழிய, ரோஷமென்று பேர்படும்படி ஒரு விகாரம் பெற்றோ மாகோம்’ ஆகிலும், உன்முகத்திலுள்ளவை மெய்யே கண்களாகில் நீ இச்சிற்றிலைச் சிதைக்க ஒருப்படமாட்டாய்’ இச்சிற்றிலை அன்புடன் நோக்குகையன்றோ கண்படைத்ததற்குப் பிரயோஜனம் என்கிறார்கள்.

“வீதிவாய்” ஸ்ரீ வாய்-ஏழனுருபு. அழித்தி-முன்னிலை யொருமை வினைமுற்று. “உருகில்லால்” என்றும் ஓதுவர். உரோடம்-ரொஷம். (ரு)

English Translation

We are not yet mature, our breasts have not ripened. We have not learnt to play your games using sand castles. O Lord who routed the army of Rakshasas in Lanka, Lord who burnt the city to dust, pray spares us!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top