(517)

(517)

பெய்யுமாமுகில் போல்வண்ணாஉன்றன் பேச்சும்செய்கையும் எங்களை

மையலேற்றி மயக்கவுன்முகம் மாயமந்திரந் தான்கொலோ

நொய்யர்பிள்ளைக ளென்பதற்குன்னை நோவநாங்களு ரைக்கிலோம்

செய்யதாமரைக் கண்ணினாயெங்கள்  சிற்றில்வந்து சிதையேலே

பதவுரை

பெய்யும்

வர்ஷியாநின்றுள்ள
மா முகில் போல் வண்ணா

காளமேகம் போன்ற திருநிறத்தையுடையவனே!
உன் தன்

உன்னுடைய
பேச்சும் செய்கையும்

(தாழ்ந்த) வார்த்தைகளும், (தாழ்ந்த) வியாபாரங்களும்
எங்களை

எங்களை
மையல்

ஏற்றி பிச்சேறப்பண்ணி
மயக்க

அறிவுகெடுக்கைக்கு
உன் முகம்

உன்னுடைய முகமானது
மாயம் மந்திரம் தான்கொலொ

சுக்குப்பொடியோ?
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு

‘அற்பத்தனமுடைய சிறுமியர் இவர்கள்’ என்று நீ சொல்லுவாய் என்று பயப்பட்டு
நாங்கள்

நாங்கள்
உன்னை

உன்னைக் குறித்து
நோவ உரைக்கிலோம்

நெஞ்சு புண்படும்படி (ஒன்றும்) சொல்லுகிறோமில்லை;’
செய்ய தாமரை கண்ணினாய்

புண்டாரிகாக்ஷனே!

எங்கள் சிற்றில் வந்து சிதையேல்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிரானே! நீ எங்கள் திறத்தில் ‘அடியேன், குடியேன்’ என்றாற்போலே சொல்லும் அதிவிநய வார்த்தைகளும் கள்ளக்குழைச்சல்களும் எங்களை மிகவும் மயக்குகின்றனவே;  இதற்கெல்லாம் அடி உன் திருமுகமண்டலமிறே;l இப்படிப்பட்ட மயக்கத்தை உண்டுபண்ணுகைக்கு உன்முகம் அம்மான் பொடியோ? என்கிறார்கள் முன்னடிகளால். மாயமந்திரம்- மந்த்ர முறை உணர்ந்தவர்கள் ஒரு பொடியை மந்திரித்து ஒருவன் மேல தூரிவினால் அப்பொடி அவனை மயக்கிவிடுதல் போல, கண்ணபிரானது திருமுகம் இவர்களை மயக்கிவிட்டதென்க. ….   ….   ….   ….   (ச)

English Translation

We are not yet mature, our breasts have not ripened. We have not learnt to play your games using sand castles. O Lord who routed the army of Rakshasas in Lanka, Lord who burnt the city to dust, pray spares us!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top