(446)
மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும்ஓர் வல்வினை கண்டீர்
இங்குப் புகேன்மின் புகேன்மின் எளிதன்று கண்டீர் புகேன்மின்
சிங்கப் பிரானவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர்
பங்கப் படாதுஉய்யப் போமின் பண்டன்று பட்டினம் காப்பே.
பதவுரை
| மங்கிய |
– |
(ஆத்துமா உருத்தெரியாதபடி) மழுங்கிக் கிடப்பதற்கு காரணமான |
| வல் வினை |
– |
வலிய பாவங்களின் மூலமாக வளர்ந்த |
| நோய்காள் |
– |
வியாதிகளே |
| உமக்கும் |
– |
உங்களுக்கும் கூட |
| ஓர் வல் வினை |
– |
ஒரு கடினமான தீமை நேர்ந்தபடியே) |
| கண்டீர் |
– |
(இன்று) பாருஙக்ள் |
| இங்கு |
– |
இவ்விடத்தும் |
| புகேன்மின் புகேன் மின் |
– |
(இவர் ) வரவேண்டா, வரவேண்டா |
|
(இனி நீங்கள் என்னைக் கிட்டுகை) |
||
|
எளிது அன்று சுலபமான கரியமன்று; |
||
| புகேன்மியா |
– |
ஆகையால் இனி இங்கு வரவேண்டா |
|
(எது ஆத்துமா) |
||
| எம்மான் அவன் |
– |
எமக்குத் தலைவனுமான எம்பெருமான் |
| சேரும் |
– |
எழுந்தருளியிருப்பதற்கிடமான |
| திரு கோவில் கண்டீர்‘ |
– |
திருக்கோயிலாக அமைந்த படியைப் பாருங்கள் |
| பங்கப்படாத |
– |
பரிபவப்படாமல் |
| உய்யபோமின் |
– |
பிழைத்துப்போங்கள். |
|
பண்டு அன்று பட்டினம் காப்பு |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** என்றபடி வியாதிகளின் அநுபவத்திற்கு ஊழ்வினைகள் ஹேதுவதலால் அவ்வூழ்வினைகளை விளித்து, ‘மிருத்யுவுக்கும் மிருத்யுவந்தான்’ என்பது போல உங்களுக்கும் ஒரு விலை வந்தது. இனி நீங்கள் உறைப்பான காவல்பெற்ற என்னிடம் தங்க முடியாது; தங்கினால் பரிபவமேபலிக்கம்; வேறிடந்தேடி ஓடினால் பிழைக்கலாம் என்கிறார். மங்கிய வல்லினை- வேறுபடுத்த வொண்ணாதபடி உருத்தெரியாமல் ஆத்துமாவோடு ஒட்டிக் கொண்டிருக்கிற வினைகாள்! என்னவுமாம்; “சார்ந்தவிரு இல்வினைகள்” என்றது காண்க. பங்கம்- ** மென்வர் ** புகேன்மின் புகேன்மின்’ என்ற அடுக்குத்தொடர் விரைவப்ற்றியது; “அசை நிலை பொருள் நிலை இசைநிறைக்கொருசொல், விரைவுபற்றியது; “அசை நிலை பொருள் நிலை இசைநிறைக்கொரு சொல், இரண்டு மூன்று நான்கெல்லைமுறை அடுக்கும்’ என்பது நன்னூல்.
English Translation
This is a treasure-house of jewels. Any evil minded rogues there, beware! The wonder Lord who came as a beautiful manikin has fondly come to stay in me permanently. So run, do not tarry. No more like old, the fortress is on guard!
