(446)

(446)

மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும்ஓர் வல்வினை கண்டீர்

இங்குப் புகேன்மின் புகேன்மின் எளிதன்று கண்டீர் புகேன்மின்

சிங்கப் பிரானவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர்

பங்கப் படாதுஉய்யப் போமின் பண்டன்று பட்டினம் காப்பே.

பதவுரை

மங்கிய

–

(ஆத்துமா உருத்தெரியாதபடி) மழுங்கிக் கிடப்பதற்கு காரணமான
வல் வினை

–

வலிய பாவங்களின் மூலமாக வளர்ந்த
நோய்காள்

–

வியாதிகளே
உமக்கும்

–

உங்களுக்கும் கூட
ஓர் வல் வினை

–

ஒரு கடினமான தீமை நேர்ந்தபடியே)
கண்டீர்

–

(இன்று) பாருஙக்ள்
இங்கு

–

இவ்விடத்தும்
புகேன்மின் புகேன் மின்

–

(இவர் ) வரவேண்டா, வரவேண்டா

(இனி நீங்கள் என்னைக் கிட்டுகை)

எளிது அன்று சுலபமான கரியமன்று;

புகேன்மியா

–

ஆகையால் இனி இங்கு வரவேண்டா

(எது ஆத்துமா)

எம்மான் அவன்

–

எமக்குத் தலைவனுமான எம்பெருமான்
சேரும்

–

எழுந்தருளியிருப்பதற்கிடமான
திரு கோவில் கண்டீர்‘

–

திருக்கோயிலாக அமைந்த படியைப் பாருங்கள்
பங்கப்படாத

–

பரிபவப்படாமல்
உய்யபோமின்

–

பிழைத்துப்போங்கள்.

பண்டு அன்று பட்டினம் காப்பு

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** என்றபடி வியாதிகளின் அநுபவத்திற்கு ஊழ்வினைகள் ஹேதுவதலால் அவ்வூழ்வினைகளை  விளித்து, ‘மிருத்யுவுக்கும் மிருத்யுவந்தான்’ என்பது போல உங்களுக்கும் ஒரு விலை வந்தது. இனி நீங்கள் உறைப்பான காவல்பெற்ற என்னிடம் தங்க முடியாது; தங்கினால் பரிபவமேபலிக்கம்; வேறிடந்தேடி ஓடினால் பிழைக்கலாம் என்கிறார். மங்கிய வல்லினை- வேறுபடுத்த வொண்ணாதபடி  உருத்தெரியாமல் ஆத்துமாவோடு ஒட்டிக் கொண்டிருக்கிற வினைகாள்! என்னவுமாம்; “சார்ந்தவிரு இல்வினைகள்” என்றது காண்க. பங்கம்- ** மென்வர் ** புகேன்மின் புகேன்மின்’ என்ற அடுக்குத்தொடர் விரைவப்ற்றியது; “அசை நிலை பொருள் நிலை இசைநிறைக்கொருசொல், விரைவுபற்றியது; “அசை நிலை பொருள் நிலை இசைநிறைக்கொரு சொல், இரண்டு மூன்று நான்கெல்லைமுறை அடுக்கும்’ என்பது நன்னூல்.

English Translation

This is a treasure-house of jewels. Any evil minded rogues there, beware! The wonder Lord who came as a beautiful manikin has fondly come to stay in me permanently. So run, do not tarry. No more like old, the fortress is on guard!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top