(447)

(447)

மாணிக் குறளுரு வாய மாயனை என்மனத் துள்ளே

பேணிக் கொணர்ந்து புகுதவைத்துக் கொண் டேன்பிறி தின்றி

மாணிக்கப் பண்டாரம் கண்டீர் வலிவன் குறும்பர்க ளுள்ளீர்

பாணிக்க வேண்டா நடமின் பண்டன்று பட்டினம் காப்பே.

பதவுரை

மாணி

பிரமசாரிவேஷத்தையுடைய
குளள்உரு

வாமனாய் அவதரித்தவனும்
மாணிக்கப் பண்டாரம்

மாணிக்கநிதிபோல் இனியனும்
மாயனை

ஆச்சரிய பூதனுமான எம்பெருமானை
பேணி

ஆசைப்பட்டு
கொணர்ந்து

எழுந்தருளப் பண்ணிக்கொண்டுவந்து
என் மனத்துள்ளே

என் நெஞ்சினுள்ளே
புகுத

புகுந்திருக்கும்படி
பிறிது இன்றி

வேற்றுமையில்லாமல்
வைத்துக் கொண்டேன்

அமைத்துக்கொண்டேன்.
வலிவல் குறும்பர்கள் உள்ளீர்

மிகவும் கொடிய குறும்புகளைச் செய்கிற இந்திரியங்களே!
நடமின்

(வேறிடந்தேடி) ஓடுங்கள்;
பாணிக்க வேண்டா

தாமதிக்க வேண்டியதில்லை,

பண்டு அன்று பட்டினம் காப்பு,

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தேவேந்திரனுடைய வேண்டுகோளை நிறைவேற்றுதற் பொருட்டுக் குறட்பிரமசாரியாய் மாவலியைக் குறும்பதக்கி அரசு வாங்கி ஓங்கியுலகளக்கும்போது, அநபேக்ஷிகள் தலையிலும் திருவடியை வைத்தருளின பரமகாருணிக ஸ்வபாவனும், தனது நிர்ஹேதுககிருபையினாலன்றிப் பெறுதற்கரியனும், மாயச் செயல்களில் வல்லவனுமான எம்பெருமானை நான் இன்று எனது ஹ்ருதயத்தில் நிலை நிறுத்தினேனாதலால், பொல்லாத இந்திரியங்களே! இனி நீங்கள் இங்கு நசை வைத்திட வேண்டியதில்லை என்கிறார். இந்திரியங்கள் அசேதனங்களாயினும் கொடுமைபுரிவதிற் சேதநகரில் விஞ்சியிருத்தலால் “குறும்பர்களுள்ளீர்” என உயர்திணையாகக் கூறினரென்க. “உண்ணிலாவிய ஐவரால்” “கோவாய் ஐவர் என் மெய்குடியேறி” என்பன காண்க. இந்திரியங்களை வேறிடந்தேடி ஓடச்சொன்னது- கூறைசோறிவைதாவென்று குமைக்கையாகிற உங்கள் தொழில்களைச் செய்யாதொழியுங்கள் என்றவாறு, வலிவல் – மீமிசைச் சொல். (உள்ளீர்) எம்பெருமான் எனது நெஞ்சில் வந்து குடிகொண்டவுடனே நீங்கள் ஓடிப்போகவேண்டியது ப்ராப்தம்; அப்படியன்றி இன்னும் ஓடாதிருந்தீர்களாகில் என்பது சமத்காரப் பொருள்.

மாணி- அழகுக்கும் பெயர்; ‘பிரமசாரி’ என்றபடியுமாம். உரு – வடிவு. பிறிது இன்றி- இரண்டு பொருளாகத் தோற்றாமல், ஏகவஸ்து என்னலாம்படி பொருந்தச் செய்து என்றபடி எம்பெருமானை மாணிக்க பண்டார மென்றது- அதுபோல் பெறுதற்கரியவன் என்றவாறு ***- மென்ற வடசொல் திரிபு.

English Translation

O Ye great miserable sicknesses! Listen, Let me tell you something. Know that this, my body, is a temple where the cowherd-Lord resides. O Deep-rooted miseries, let me repeat; you have not place here, know it. So more on. No more like old, the fortress is on guard!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top