(413)
தன்னடியார் திறத்தகத்துத் தாமரையா ளாகிலும் சிதகு ரைக்குமேல்
என்னடியார் அதுசெய்யார் செய்தாரேல் நன்றுசெய்தா ரென்பர் போலும்
மன்னுடைய விபீடணற்காய் மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்கண் வைத்த
என்னுடைய திருவரங்கற் கன்றியும் மற்றொருவர்க்கு ஆளா வாரே.
பதவுரை
| தன் அடியார் திறத்தகத்து |
– |
தன்னுடைய (எம்பெருமானுடைய) அடியவர்கள் விஷயத்தில் |
| தாமரையாள் ஆகிலும் |
– |
(புருஷகாரம் பண்ணக்கடவளான) பெரியபிராட்டியார்தாமே |
| சிதகு |
– |
குற்றங்களை |
| உரைக்கும் என் |
– |
கணக்கிட்டுச் சொல்லத் தொடங்கினாலும் |
| என் அடியார் |
– |
“எனக்கு அடிமைப்பட்டவர்கள் |
| அது |
– |
அக்குற்றங்களை |
| செய்யார் |
– |
செய்யமாட்டார்கள்; |
| செய்தார் என் |
– |
(செய்தகுற்றத்தைப் பொறுப்பதற்கு எம்பெருமானுண்டு என்று சிலவற்றைச் செய்தார்களாயினும் |
| நன்றி செய்தார் என்பர் |
– |
(அவர்கள்) நன்மையையே செய்தார்களத்தனை” என்று சொல்லா நிற்பவரும், |
| மன் உடைய |
– |
ஐச்வரியம் பொருந்திய |
| விபீடணற்கா |
– |
விபீஷணாழ்வானுக்காக |
| மதிள் இலங்கை திசை நோக்கி |
– |
மதிளையுடைய லங்கையின் முகமாக |
| மலர்கண் வைத்த |
– |
மலர்ந்த திருக்கண்களை வைத்தருளினவனும் |
| என்னுடைய |
– |
எனக்கு ஸ்வாமியுமான |
| திரு அரங்கற்கு அன்றியும் |
– |
பெரிய பெருமாளையொழிய |
| மற்று ஒருவர்க்கு |
– |
வேறொருவர்க்கு |
| ஆள் ஆவரே |
– |
ஆட்படுவோர் ஆரேனுமண்டோ. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “நீரிலே நெருப்புக்கிளருமாபோலே குளிர்ந்த திருவுள்ளத்தில் அபராதத்தாலே சீற்றம் பிறந்தால் பொறுப்பது இவளுக்காக; திருவடியைப் பொறுப்பிற்குமிவள் தன் சொல்வழி வருமவனைப் பொறுப்பிக்கச் சொல்ல வேண்டாவிற்றே” (முமுக்ஷுப்படி) என்றருளிச் செய்தபடி- சேதநர் செய்த பிழைகளைக் கணக்கிட்டு அதற்கு தக்கவாறு தண்டம் நடத்துவதாகச் சீற்றமுற்றிருக்கு மெம்பெருமானை எதிர்த்து ***= இவ்வுலற் பிழைசெய்தார் ஆர்?” என்றாற்போலப் சில பேச்சுக்களைப் பேசி மயக்கி அக்குற்றவாளிகளை வாழ்விக்க கடவனான பிராட்டிதானே எம்பெருமாளுடைய திருவுள்ளத்தைச் சோதிக்கக் கருதியோ, வேறு ஏதேனுமொரு காரணம் கொண்டோ அப்பகனச்சேஷபூதர்திறத்துச் சில குற்றங்களை எம்பெருமானிடத்துக் கூறுவளோயாகில், அதுகேட்டு எம்பெருமான், “இப்படிப்பட்ட குற்றங்களை உன்னடியார் செய்யத் துணிவர்களேயன்றி என்னடியார் ஒருகாலுஞ் செய்யமாட்டார்கள்” என்பன்; அவ்வளவிலும் பிராட்டியானவள், “நீர் இங்ஙன் சொல்லலாகாது, அவர்கள் குற்றவாளிகள் என்பதில் இறையும் ஐயமில்லை” என்று நிர்ப்பந்தித்துச்சொல்லில், அதற்கு எம்பெருமான் “உன்னடியார் செய்யுங் குற்றங்கள் எனக்குக் குண்மாகவே தோற்றாநின்றன; இனி நீ ஒன்றும் எதிர்த்துப்பேசக் கடவையல்ல” என்று வெட்டொன்று துண்டிரண்டாகக் கூறுவன் என்பது முன்னடிகளிற் போதரும். இதனால், பெருமாள், பிராட்டி, இருவரும் ஒருவருக்கொருவர் போராடி அடியாரைநோக்கியருளுமாறு கூறியதாம். தாமரையாள் – இடமடியாப்பிறந்த பெயர். குற்றத்தையும் நற்றமாகக் கூறவேண்டியவள் சிதகுரைப்பதுபற்றித் “தாமரையாளாகிலும்” என்றார். “என்னடியார் குற்றஞ்செய்யார்கள்” என்று சொல்லவேண்டும் போதும், குற்றம் என்ற சொல்லை எம்பெருமான் வாயாற் சொல்லுதற்குக்கூசி “என்னடியார் அது செய்யார்” என்பனாம்; “பேதை பாலகன் அதாகும்’ என்ற திருமாலையும்,
***-***-***-***-***-
” என்றச்லோகத்தில் ***- என்றவிடத்துப் பூருவர்களின் வியாக்கியானமும் நோக்கத்தக்கன.
(செய்தாரேல் நன்று செய்தார்) “நாமுண்டு என்றும், ஒரு ப்ரமாணமுண்டு என்றும் நினைத்துச்செய்தார்களாகில் அழகிதாகச் செய்தார்கள், ஒருதர்மா தர்மமும் பரலோகமும் இல்லை என்று செய்தார்களன்றே: ***- நாமுளோம் என்றன்றோ செய்தது; அதாவது – மடவெடுக்கையும் , காமன் காலிலே விழுகையும்” என்ற வியாக்கியான வாக்கியம் அறியத்தக்கது. “என்பர் போலும்” என்றவிடத்து, போலும்- வாக்கியாலங்காரம். (மன்னுடைய இத்யாதி.) ‘செல்வவிபீடணற்கு வேறாகநல்லானை” என்றபடி விபீஷணாழ்வான் பக்கலிலுள்ள பக்ஷபாதாதிசயந்தோற்ற அவனது நகரத்தை நோக்கிக் கண் வளரந்தருளுகிறபடி; “தென்திசையிலங்கை நோக்கி” என்றார் திருமாலையிலும். மண்-பெருமை. கீடழழ்ப்பாடிற் போலவே இப்பாட்டிலும் “மலர் கண்” என்றவிடத்திற்கு; “பெரியபெருமாள் திக்கண்கள் ஆச்ரிதரைக்கண்டவாறே மலர்ந்தபடி” என்று ஆன்றோர் உரைத்தருளினமையால் “மலர்க்கண்” என்றபாடம் மறுக்கப்பட்டது; இனி, மலர்போன்ற கண் என்று பொருள் கொள்வதிற் குற்றமில்லாமையால் அப்பொருளுக்குச் சேர “மலர்க்கண்” என்ற பாடம் கொள்ளத்தகுமாயினும், அது வியாக்கியானப் பொருத்த மற்ற தெனத் துணிக.
(என்னுடைய இத்யாதி.) இப்படி அடியாரைப் பரிந்து நோக்கவல்ல பெரிய பெருமாளைத் தவிர்த்து மற்று அருக்கேனும் ஆட்செய்கை கூடுமோ? என்றவாறு. “ஆளானரே” என்றது – ஆளாக்கமாட்டார் என்றபடி; “பிரிநிலை வினா எண் ஈற்றசை தேற்றம். இசைநிறை என ஆறுஏகாரம்மே” (கண்ணூல்) என்ற சூத்திரத்தில் ஏகார இடைச்சொல்லுக்கு எதிர் மறைப்பொருள் கூறப்படா தொழியினும், “புதியன புகுதல்” என்பதனால் அப்பொருள் கொள்ளப்படுமென்றுணர்க.
English Translation
The Lord reclines with his eyes set in the direction of fortified Lanka with concern for the good Vibhishana. Even if the lotus-lady Lakshmi herself were to give adverse reports about his devotees, he seems to say, “My devotees will never do that, and if they did, they did well”. Will anyone choose to serve a master other than my Lord of Tiru-Arangam?
