(410)

(410)

குன்றாடு கொழுமுகில்போல் குவளைகள்போல் குரைகடல்போல்

நின்றாடு கணமயில்போல் நிறமுடைய நெடுமாலூர்

குன்றாடு பொழில்நுழைந்து கொடியிடையார் முலையணவி

மன்றூடு தென்றலுமாம் மதிளரங்க மென்பதுவே.

பதவுரை

குன்று ஆடு

–

மலையினுச்சியிற்சார்ந்த
கொழுமுகில் போல்

–

நீர் நிறைந்த மேகம் போலவும்
குவளைகள் போல்

–

கருநெய்தல் பூப்போலவும்
குரை

–

ஒலிசெய்யாநின்ற
கடல்போல்

–

கடல்போலவும்
நின்று ஆடு

–

(களிப்பாலே) நின்று ஆடாநின்றுள்ள
மயில்வாகணம் போல்

–

மயில்களின் திரள்போலவும் (இராகின்ற)
நிறம் உடைய

–

வடிவழகையுடையவனான
நெடுமால்

–

எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற)
ஊர்

–

திருப்பதியாவது
தென்றல்

–

தென்றல் காற்றானது
குன்று

–

(மலய) பர்வதத்திலுள்ள
பொழிலூடு

–

சோலைகளினிடையிலே
அழைத்து

–

அழைத்து

(அங்குள்ள பூத்களின் தாதுகளை அனைத்து பரிமளத்தைக் கொய்து கொண்டு)

கொடி இடையார்

–

கொடிபோன்ற இடையையுடையரான பெண்களினுடைய
முலை

–

(கலவைச் சாந்தணிந்த) முலைகளை
அணவி

–

வியாபித்து

(அந்தப் பரிமளத்துடனே)

மன்றுடு

–

நாற்சந்திகளினூடே
உலாம்

–

உலாவப்பெற்ற மதிள் அரங்கம் என்பது

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நிறம் என்று திருமேனிநிறத்தன்னையே சொல்லிற்றாக்க் கொள்ளில் கண்ட கண் மயிர்க்குச்சி விடும்படியான குளிர்த்திக்கு – நீர்கொண்டெழுந்த காளமேகத்தின் நிறத்தையும், நெய்ப்புக்கு – குவளைப்பூவின் நிறத்தையும், இருட்சிக்கு – கடலின் நிறத்தையும், புசர்ப்புக்கு – மயில் கழுத்தின் நிறத்தையும் உவமைகூறுவதாக நிறமித்துக்கொள்ள வேணும். எம்பெருமான் வடிவுக்கு ஒன்றே உபமாநமாகப் பேராமை இதனால் அத்யத்தக்கது.

English Translation

The breeze blows through the hilly groves, then gently over the breasts of thin-waisted dames, and wanders through the four streets of walled Tiru-Arangam. It is the abode of our Lord of dark laden-cloud hue, dark water-lily-hue, dark deep-ocean hue, and dark dancing peacock hue.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top