(403)
பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப்பொழுதில் கொணர்ந்துகொடுத்து ஒருப்படித்த வுறைப்பனூர்
மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை யளித்திருப்பார்
சிறப்புடைய மறையவர்வாழ் திருவரங்க மென்பதுவே.
பதவுரை
| பிறப்பு அகத்தே |
– |
ஸூதிகாக்ருஹத்திலேயே |
| மாண்டு ஒழிந்த |
– |
இறந்தொழிந்த |
| பிள்ளைகளை நால்வரயும் |
– |
புத்திரர்கள் நால்வரையும் |
| இறைப் பொழுதில் |
– |
ஒரு நொடிப் பொழுதில் |
| கொணர்ந்து |
– |
(ஸ்ரீவைகுண்டத்தினின்றும்) கொண்டு வந்து |
| கொடுத்து |
– |
மாதா பிதாக்கள் கையில் கொடுத்து |
| ஒருப்படுத்த |
– |
(இப்பிள்ளைகள் எம்பிள்ளைகள்தான் என்று) ஸம்மதி பண்ணுவித்த |
| உறைப்பன் |
– |
சத்தியந்தன் (எழுந்தருளியிருக்கிற) |
| ஊர் |
– |
தீருப்பதியாவது: |
| மறை |
– |
வேதங்களிற் கூறப்பட்டுள்ள (வைதிகமான) |
| பொருந்தி |
– |
சிறந்த (மூன்று) அக்நிகளையும் |
| வளர்த்து இருப்பவர் |
– |
(அலிச்சிந்தமாக) வளர்த்துக் கொண்டிருப்பவர்களும் |
| எரு |
– |
(தத்தம் திருமாலிகைக்கு) எழுந்தருளுகிற |
| விருந்தை |
– |
அதிதிகளான ஸ்ரீவைஷ்ணவர்களை |
| அளித்திருப்பவர் |
– |
ஆதரித்துப்வோருமவர்களும் |
| சிறப்பு உடைய |
– |
(இப்படிப்பட்ட) உத்கர்ஷங்களை யுடையவர்களுமான |
|
களையுடையவர்களுமான |
||
| மறையவர் |
– |
வைதிகர்கள் |
| வாழ் |
– |
வாழப்பெற்ற |
|
திரு அரங்கம் என்பதுவே…. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இதில் முன்னோடிகளிற் கூறிய வரலாறு, கீழ் முதற்பத்தில் உய்யவுலகில், “துப்புடையாயர்கள் தம்” என்ற பாட்டின் உரையில் விரித்துரைக்கப்பட்டுள்ளது. மூன்றாமடியில், விருந்து என்ற சொல் ஆகுபெயரால் விருந்தினரை உணர்த்துகிறது. … …. ….. (உ)
English Translation
Vedic seers of eminence, who perform fire-sacrifices and respectfully offer food to unexpected guests, reside in Tiru-Arangam. It is the abode of the Lord who is a trice brought back the four infants, –that had died in the delivery room, and restored them to their parents.
