(403)

(403)

பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும்

இறைப்பொழுதில் கொணர்ந்துகொடுத்து ஒருப்படித்த வுறைப்பனூர்

மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை யளித்திருப்பார்

சிறப்புடைய மறையவர்வாழ் திருவரங்க மென்பதுவே.

பதவுரை

பிறப்பு அகத்தே

–

ஸூதிகாக்ருஹத்திலேயே
மாண்டு ஒழிந்த

–

இறந்தொழிந்த
பிள்ளைகளை நால்வரயும்

–

புத்திரர்கள் நால்வரையும்
இறைப் பொழுதில்

–

ஒரு நொடிப் பொழுதில்
கொணர்ந்து

–

(ஸ்ரீவைகுண்டத்தினின்றும்) கொண்டு வந்து
கொடுத்து

–

மாதா பிதாக்கள் கையில் கொடுத்து
ஒருப்படுத்த

–

(இப்பிள்ளைகள் எம்பிள்ளைகள்தான் என்று) ஸம்மதி பண்ணுவித்த
உறைப்பன்

–

சத்தியந்தன் (எழுந்தருளியிருக்கிற)
ஊர்

–

தீருப்பதியாவது:
மறை

–

வேதங்களிற் கூறப்பட்டுள்ள (வைதிகமான)
பொருந்தி

–

சிறந்த (மூன்று)  அக்நிகளையும்
வளர்த்து இருப்பவர்

–

(அலிச்சிந்தமாக) வளர்த்துக் கொண்டிருப்பவர்களும்
எரு

–

(தத்தம் திருமாலிகைக்கு) எழுந்தருளுகிற
விருந்தை

–

அதிதிகளான ஸ்ரீவைஷ்ணவர்களை
அளித்திருப்பவர்

–

ஆதரித்துப்வோருமவர்களும்
சிறப்பு உடைய

–

(இப்படிப்பட்ட) உத்கர்ஷங்களை யுடையவர்களுமான

களையுடையவர்களுமான

மறையவர்

–

வைதிகர்கள்
வாழ்

–

வாழப்பெற்ற

திரு அரங்கம் என்பதுவே….

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இதில் முன்னோடிகளிற் கூறிய வரலாறு, கீழ் முதற்பத்தில் உய்யவுலகில், “துப்புடையாயர்கள் தம்” என்ற பாட்டின் உரையில்  விரித்துரைக்கப்பட்டுள்ளது. மூன்றாமடியில், விருந்து என்ற சொல் ஆகுபெயரால் விருந்தினரை உணர்த்துகிறது.      …    ….    …..   (உ)

English Translation

Vedic seers of eminence, who perform fire-sacrifices and respectfully offer food to unexpected guests, reside in Tiru-Arangam. It is the abode of the Lord who is a trice brought back the four infants, –that had died in the delivery room, and restored them to their parents.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top