(386)

(386)

நாடும் நகரும் அறிய மானிடப் பேரிட்டு

கூடி யழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே

சாடிறப் பாய்ந்த தலைவா தாமோ தராஎன்று

நாடுமின் நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.

பதவுரை

நாடும்

–

குக்ராமங்களிலுள்ள ஸாமாந்யஜ்ஞானிகளும்
அறிய

–

(இவன் உயர்ந்தவன்’ என்று) அறியும்படி,
மானிடர் பேர் இட்டு

–

(ஷுத்ர) மனுஷ்யர்கள் பெயரை விட்டு
கூடி

–

அவர்களோடு கூடி
அழுங்கி

–

ஒளி மழுங்கி
குழியில் வீழ்ந்து

–

(அவர்கள் விழுந்த) குழியிலே விழுந்து
வழுக்காதே

–

தவறிப்போகாமல்,
சாடு

–

‘சகடாஸுரன்
இற

–

முறியும்படி
பாய்ந்த

–

உதைத்தருளின
தலைவா

–

பெரியோனே!’ (என்றும்)
தாமோதரா என்று

–

‘தாமோதரனே! என்றும்
நாடுமின்

–

வாழ்த்திக்கொண்டு திரியுங்கள்;

(இங்ஙனேயாகில்,)

நாரணன் தம்மன்னை நாகம் புகான்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-“நாடு நகருமறிய” என்கிறவிது ஈற்றடியில், ‘நாடுமின்” என்ற வினைமுற்றோடு இயையும். அழுங்கி- ஆத்துமாவுக்கு இயற்கையாயுள்ள ஸ்வரூபப்ரகாசம் மழுங்கி என்றபடி,

English Translation

Letting the town and country know, you give a local man’s name to your child, and fall into the same pit that he is in. Call “O Lord-who-smote-the-cart!”, “O Damodara!” and exult. Narayana’s own mother can never go to Hell.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top