(386)
நாடும் நகரும் அறிய மானிடப் பேரிட்டு
கூடி யழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே
சாடிறப் பாய்ந்த தலைவா தாமோ தராஎன்று
நாடுமின் நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
பதவுரை
| நாடும் |
– |
குக்ராமங்களிலுள்ள ஸாமாந்யஜ்ஞானிகளும் |
| அறிய |
– |
(இவன் உயர்ந்தவன்’ என்று) அறியும்படி, |
| மானிடர் பேர் இட்டு |
– |
(ஷுத்ர) மனுஷ்யர்கள் பெயரை விட்டு |
| கூடி |
– |
அவர்களோடு கூடி |
| அழுங்கி |
– |
ஒளி மழுங்கி |
| குழியில் வீழ்ந்து |
– |
(அவர்கள் விழுந்த) குழியிலே விழுந்து |
| வழுக்காதே |
– |
தவறிப்போகாமல், |
| சாடு |
– |
‘சகடாஸுரன் |
| இற |
– |
முறியும்படி |
| பாய்ந்த |
– |
உதைத்தருளின |
| தலைவா |
– |
பெரியோனே!’ (என்றும்) |
| தாமோதரா என்று |
– |
‘தாமோதரனே! என்றும் |
| நாடுமின் |
– |
வாழ்த்திக்கொண்டு திரியுங்கள்; |
|
(இங்ஙனேயாகில்,) |
||
|
நாரணன் தம்மன்னை நாகம் புகான் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***-“நாடு நகருமறிய” என்கிறவிது ஈற்றடியில், ‘நாடுமின்” என்ற வினைமுற்றோடு இயையும். அழுங்கி- ஆத்துமாவுக்கு இயற்கையாயுள்ள ஸ்வரூபப்ரகாசம் மழுங்கி என்றபடி,
English Translation
Letting the town and country know, you give a local man’s name to your child, and fall into the same pit that he is in. Call “O Lord-who-smote-the-cart!”, “O Damodara!” and exult. Narayana’s own mother can never go to Hell.
