(380)

(380)

செத்துப் போவதோர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவபி ரான்மேல்

பத்த ராயிறந் தார்பெறும் பேற்றைப் பாழித் தோள்விட்டு சித்தன்புத் தூர்க்கோன்

சித்தம் நன்கொருங் கித்திரு மாலைச் செய்த மாலை இவைபத்தும் வல்லார்

சித்தம் நன்கொருங் கித்திரு மால்மேல் சென்ற சிந்தை பெறுவர் தாமே.

பதவுரை

செத்துப் போவது ஓர் போது

இறந்து போகுங் காலத்திலே
செய்கைகள்

(கடுஞ்) செயல்களை
நினைத்து

நினைத்து
தேவபிரான் மேல்

தேவபிரான் பக்கலில்
பத்தர் ஆய்

அன்பு பூண்டவர்களாய் இருந்து
இறந்தார்

(பின்பு) இறந்தவர்கள்
பெறும் பேற்றை

அடையக்கூடிய பலன்களைக் குறித்து,
பாழி தோன்

(ஸம்ஸாரத்தை வென்ற) மிடுக்கையுடைய தோள்களை யுடையவரும்
புத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
கோன்

தலைவருமான
விட்டு சித்தன்

பெரியாழ்வார்
செய்யும்

(யமபடர்களால்) செய்யப்படுகிற
சித்தம்

(தம்முடைய) நெஞ்சை
திருமாலை

திருமால் நிறத்தில்
நன்கு

நன்றாக
ஒருங்கி

ஒருபடுத்தி
செய்த

அருளிச்செய்த
மாலை

சொல்மாலையாகிய
இவை பத்தும்

இப்பத்துப் பாட்டுகளையும்
வல்லவர்

ஓதவல்லவர்கள்,
சித்தம் நன்கு ஒருங்கி

(ஆழ்வார்க்குப்போல்) நெஞ்சு ஒருபடிப்படப்பெற்று
திருமால்மேல்

திருமால் பக்கலிலே
சென்ற

குடிகொண்ட
சிந்தை

மநஸ்ஸை
பெறுவர்

உடையராவர்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘மரணகாலத்தில் யமபடர்கள் பொறுக்கவொண்ணாதபடி நலிவர்களே!’ என்று நினைத்துத் தீவழியிற் செல்லாமல் எம்பெருமான் பக்கலில் அன்புபூண்டிருந்து, பின்பு இறப்பவர்கள் பெறும்பேற்றைக் குறித்துப் பெரியாழ்வாரருளிச்செய்த இப்பாசுரங்களை ஓதவல்லவர்கள், எம்பெருமானிடத்துக் குடிகொண்ட நெஞ்சையுடையராகப் பெறுவர்களென்று பலஞ்சொல்லித் தலைக் கட்டியவாறு.

English Translation

This decad of songs by strong-armed-Vishnu’s devotee, King of Srivilliputtur, was sung by focusing the heart on Tirumal, about what they do at the time of death, and the good that accrues to those who die as devotees of the Lord of gods. Those who master it will attain a heart drawn to the Lord Tirumal.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top