(379)
வாயொ ருபக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர்க்குழிக் கண்கள் மிழற்ற
தாய்ஒ ருபக்கம் தந்தைஒரு பக்கம் தார மும்ஒரு பக்கம் அலற்ற
தீஓ ருபக்கம் சேர்வதன் முன்னம் செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்ற
மாய்ஒ ருபக்கம் நிற்கவல் லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலு மாமே.
பதவுரை
| வாய் |
– |
வாயானது |
| ஒருபக்கம் வாங்கிவலிப்ப |
– |
(வாயுவினாலே) ஒருக்கடுத்து வலிக்கவும் |
| வார்ந்த நீர் |
– |
பெருகாநின்ற நீரையுடையதும் |
| குழி |
– |
உள்ளே இடிய இழிந்ததுமான |
| கண்கள் |
– |
கண்ணானது |
| மிழற்ற |
– |
அலமந்து நிற்கவும், |
| ஒரு பக்கம் |
– |
ஒரு பக்கத்தில் |
| தந்தை |
– |
தகப்பானரும் |
| தாரமும் |
– |
மனைவியும் (இருந்துகொண்டு) |
| அலத்த |
– |
கதறி அழவும் |
| ஒரு பக்கம் |
– |
மற்றொரு பக்கத்திலே |
| தீ |
– |
நெருப்பானது |
| சேர்வதன் முன்னம் |
– |
(மார்லில வந்து) சேர்வதற்கு முன்னே |
| செம் கண் மாலொடும் |
– |
புண்டரீகரக்ஷனான எம்பெருமாளை |
| சிக்கன சுற்றம் ஆய் |
– |
நிருபாதிக பந்துவாகக் கொண்டு |
| ஒரு பக்கம் |
– |
அவனொருவனிடத்திலேயே பக்ஷபாதமாய் |
| நிற்க வல்லாருக்கு |
– |
நிலைத்து நிற்ப வல்லவர் களுக்கு |
| அரவ தண்டத்தில் |
– |
யமதண்டனையில் நின்றும் |
| உய்யலும் ஆம் |
– |
தப்பிப்பிழைக்கப் பெறலாம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மாணஸமயத்தில் வாயுவிகாரத்தாலே வாய் ஒருக்கடுத்து வலிக்கும்; நெடுநாளாக ஆஹாரமற்றுக்கிடப்பதானல் உள்ளிழந்துள்ள கண்கள் மருள மருள விழிக்கும்; இவ்விகாரங்களைக்கண்டு தாயர், தந்தையர், மனைவியர் முதலானார் மூலைக்கொருவராக உட்கார்ந்துகொண்டு கண்ணீர்விட்டுக்கதறி அழுவார்கள்; இப்படிப்பட்ட ஸந்நிவேசத்தில், உயிர்போயிற்றென்று சிலர் வந்து மார்பில் நெருப்பைக்கொட்டுவார்கள்; ஆனபின்பு, சரீரம் வலிவுற்றிருக்கும் காலங்களைப் பாழேகழித்தவர்கள் சரமஸமயத்திற்படும்பாடு இதுவாகையால், அப்போது பகவந்நாமஸங்கீர்த்தத்துக்கு அவகாசம் பெறாமல் யமகிங்கரர்களின் நலிவுக்கு ஆளாகவேண்டிவரும்; ஆதலால் சரீரம் கட்டுக்குலைவதற்கு முன்னமே எம்பெருமான்றன்னையே ஸர்வவித பந்துவுமாகப் பற்றப்பெற்றால் யமதண்டனைக்குத் தப்பிப்பிழைக்கலா மென்றவாறு.
தாரம் — ??????? என்ற வடசொல விகாரம் சிக்கன நிற்கவல்லாருக்கு என்று இயைப்பினுமாம் ??????????? கராயிருப்பவர்கட்கு என்று பொருளாம்.
English Translation
The mouth will become contorted; the eyes will become deep, sunken and bleary. With mother on one side, father on the other side and wife screaming at the feet, the pyre will be lit. Before that happens, those who seek the red-eyed-Lord Senkanmal as their closest relative and stand apart from the world will escape the throes of death.
