(361)

(361)

குற்றமின்றிக் குணம்பெருக்கிக் குருக்களுக்குஅனு கூலராய்

செற்றமொன்றுமி லாதவண்கையி னார்கள்வாழ்திருக் கோட்டியூர்

துற்றியேழுல குண்டதூமணி வண்ணன்தன்னைத் தொழாதவர்

பெற்றதாயர் வயிற்றினைப்பெரு நோய்செய்வான்பிறந் தார்களே.

பதவுரை

குற்றம் இன்னி

ஒருவகையான குற்றமுமில்லாமல்
குணம்

(சமம், தமம் முதலிய குணங்களை)
பெருக்கி

வளரச் செய்துகொண்டு
குருக்களுக்கு

(தம்தம்) ஆசாரியர்களுக்கு
அனுகூலர் ஆய்

(கைங்கரியம் பண்ணுவதற்குப்) பாங்காயிருப்பவர்களும்
செற்றம் ஒன்றும் இலாத

பொறாமை யென்பது சிறிதுமில்லாதவர்களும்
வண்கையினார்கள்

கையையுடையவர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ்

வாழுமிடமான
திருக்கோட்டியூர்

திருக்கோட்டியூரில் (எழுந்தருளியிருப்பவனும்)
ஏழ் உலகு

ஸப்தலோகங்களையும்
துற்றி

ஒருகபளமாகத்திரட்டி
உண்ட

அமுது செய்தருளினவனும்
தூ

பழிப்பற்ற
மணி

நீலமணிபோன்ற
வண்ணந்தன்னை

நிறத்தையுடையவனுமான எம்பெருமானை
தொழாதவர்

வணங்காதவர்

பெற்ற (தங்களைப்) பெற்ற

தாயர்

தாய்மாருமடய
வயிற்றினை

வயிற்றை
பெருநோய் செய்வான்

மிகவும்  கொடுமைப்படுத்தமைக்காக
பிறந்தார்கள்

பிறந்தார்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உலகத்திற் பிறந்த பிள்ளைகள் திருக்கோட்டியூ ரெம்பெருமானை வணங்கினால்தான், அவர்களைப் பெற்ற தாய்மார்பேறு பெற்றவராவார்கள்; அல்லாவிடில், இப்பிள்ளைகளால் அந்தத் தாய்மார்கட்கு ஒருவகைப் பயனுமில்லாமல், பிரஸவகாலத்திற்பட்ட வேதனையே மிகுந்ததாமென்றவாறு.

English Translation

The Lord who swallows the seven worlds in a trice resides in Tirukkottiyur with people who are free from blame, who cultivate good qualities, with malice towards none, who always emulate their preceptors and remain generous at heart. They who do not offer worship of the gem-hued Lord do surely cause immense pain to the wombs of their mothers by their birth.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top