(360)

(360)

நாவகாரியம் சொல்லிலாதவர் நாள்தொறும்விருந் தோம்புவார்

தேவகாரியம் செய்துவேதம் பயின்றுவாழ்திருக் கோட்டியூர்

மூவர்காரிய மும்திருத்தும் முதல்வனைச்சிந்தி யாதஅப்

பாவகாரிக ளைப்படைத்தவன் எங்ஙனம்படைத் தான்கொலோ.

பதவுரை

அகாரியம்

நாவினாற் சொல்லவொண்ணாதேவற்றை
சொல்லில்லாதவர்

(ஒருநாளும்) சொல்லியறியாத ஸ்ரீவைஷ்ணவர்கள்
நாள் தோறும்

நாடோறும்
விருந்து ஓம்புவார்

(ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு விருந்தளித்துக் கொண்டும்
தேவர்காரியம் செய்து

பகவதாராதகம் பண்ணிக் கொண்டும்
வேதம்

வேதங்களை
பயின்று

ஓதிக்கொண்டும்
வாழ்

வாழுமிடாமன
திருக்கோட்டியூர்

தீருக்கோட்டியூரில் எழுந்தருளியிருப்பவனும்,)
மூவர்

பிரமன், ருத்ரன், இந்திரன் என்ற மூவருடைய
காரியமும்

காரியங்களையும்
திருத்தும்

செய்து  தலைக்கட்டுமவனும்.
முதல்வனை

(எல்லார்க்கும்) தலைவனுமான எம்பெருமானை
சிந்தியாத

நெஞ்சாலும் நினையாத
அ பாவ காரிகளை

அப்படிப்பட்ட (மிகவுங்கொடிய) பாவஞ்செய்த பிராணிகளை
படைத்தவன்

ஸ்ருஷ்டித்தவன்
எங்ஙனம்

எதுக்காக
படைத்தான் கொல் ஓ

ஸ்ருஷ்டித்தானோ! (அறியோம்)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பொய் பேசுகை, பிறரை புகழுகை முதலிய துஷ்கர்மங்களில் அந்வயமற்றவரும், உள்ளூர் ஸ்ரீவைஷ்ணவர்களையும் அதிதிகளைப்போல் ஆதரிப்பவரும், பகவதாராதநம, வேதாத்யயநம் முதலிய ஸத்கர்மங்கள் செய்துகொண்டு  போது போக்குமவர்களுமான பரமபாகவதர்கள் வாழுமிடமாகிய திருக்கோட்டியூரி லெழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பாவியாத பாவிகளைப் பிரமன் படைத்தது என்ன பயனைக் கருதியோ? அறியோம் என்கிறார். வேர் + காரியம், தேவகாரியம்; திருவிளக்கெரிக்கை, திருமாலை யெடுக்கை முதலியனகொள்க. மூவர் காரயிமாவது- மதுகைடபர்கள் கையில் பறிகொடுத்த வேதத்தை மீட்டுக் கொடுத்தருளியது, பிரமனுக்குச் செய்த காரிணம்; குருவும் பிதாவுமான பிரம்மனுடைய தலையைக் கிள்ளினமையால் வந்த பாபத்தைப் பிச்சையிட்டு, போக்கியருளியது, ருத்ரனுக்குச் செய்த காரியம்; மஹாபலி போல்வார் கையிற் பறிகொடுத்த ராஜ்யத்தை மீட்டுக் கொடுத்தருளியது, இந்திரனுக்குச் செய்த காரியம். திருத்துகை- ஒழுங்குபடச் செய்கை. சிந்தியாத- …………….. என்ற வட சொல்லடியாப் பிறந்த எதிர்மறைப் பெயரெச்சம். பாவகாரி- ……………………..

English Translation

The Lord who makes the three agents Brahma, Rudra and Indra perform their roles, resides in Tirukkottiyur where they speak no untruth, every day receive guests with honor, perform dedicated temple service and pursue Vedic studies all their lives. Wonder how the Creator ever created wicked ones, they who never think of the first-cause Lord even once!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top