(350)
கஞ்சனும் காளியனும் களிறும்மரு தும்எருதும்
வஞ்சனை யில்மடிய வளர்ந்தமணி வண்ணன்மலை
நஞ்சுமிழ் நாகமெழுந்தணவி நளிர் மாமதியை செஞ்சுடர்
நாவளைக்கும் திருமாலிருஞ் சோலையதே.
பதவுரை
| கஞ்சனும் |
– |
கம்ஸனும் |
| காளியனுங் |
– |
காளிய நாகமும் |
| களிறும் |
– |
(குவலயாபீடமென்ற) யானையும் |
| மருதும் |
– |
இரட்டை மருதமரங்களும் |
| எருதும் |
– |
(அரிஷ்டாஸுரனாகிற) ரிஷபமும் |
| வஞ்சனையின் |
– |
(தந்தம்முடைய) வஞ்சனைகளாலே |
| மடிய |
– |
(தாம் தாம்) முடியும்படி |
| வளர்ந்த |
– |
(திருவாய்ப்பாடியில்) வளர்ந்தருளினவனும் |
| மணிவண்ணன் மலை |
– |
நீலமணிபோன்ற நிறமுடையவனுமான கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கும்) மலையாவது: |
| நஞ்சு |
– |
விஷத்தை |
| உமிழ் |
– |
உமிழாநின்றுள்ள |
| காகம் |
– |
(மலைப்) பாம்பானவை |
| நளிர் |
– |
குளிர்ந்த |
| மா மதியை |
– |
(மலைச்சிகரத்தின் மேல் தவழுகின்ற) |
|
பூர்ணச்சந்திரனை |
||
|
(தமக்கு உணவாக நினைத்து) |
||
| எழுந்து |
– |
(படமெடுத்துக்) கிளர்ந்து |
| அணலி |
– |
கிட்டி |
| செம் சுடர் |
– |
சிவந்த தேஜஸ்ஸையுடைய |
| நா |
– |
(தனது) நாக்கினால் |
| அளைக்கும் |
– |
(சந்திரனை) அளையா நிற்குமிடமான |
|
திருமாலிருஞ்சோலை அதே. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- முன்னடிகளிலடங்கிய வரலாறுகள் கீழ்ப் பலவிடங்களில் விரிக்கப்பட்டன. பின்னடிகளின் கருத்து; திருமலையிலுள்ள மலைப்பாம்புகள் பூர்ணசந்திரனைப்பார்த்து, அவனைத் தமது ஆமிஷமாகக் கருதி, மேற்கிளர்ந்த தமது நாவினால் அச்சந்திர மண்டலத்தை அளையா நிற்குமென்று- இத்திருமலையில் ஒக்கத்தைக் கூறியவாறாம்… … … (உ)
English Translation
On the hill of Malirumsolai, the venom-spitting cobra raises its hood and licks the cool full-moon with its glistening red tongue. It is the hill abode of the Lord who grew up destroying by their own evil the serpent Kaliya, the elephant Kuvalayapida, the twin Arjuna trees, the bull Arishtanemi and the wicked Kamsa.
