(337)
கரிய முகில்புரை மேனிமாயனைக் கண்ட சுவடுரைத்து
புரவி முகம்செய்து செந்நெலோங்கி விளைகழ னிப்புதுவை
திருவிற்பொலி மறைவாணன் பட்டர்பிரான் சொன்ன மாலைபத்தும்
பரவு மனமுடைப் பத்தருள்ளார் பரமனடி சேர்வர்களே.
பதவுரை
| கரியமுகிற் புரைமேனி |
– |
கருமலர் போன்ற திருமேனியுடையனும் |
| மடாயினை |
– |
ஆச்சாரியார் செய்கைகளையுடையனுமான கண்ணபிரானை |
| கண்ட சுவடு |
– |
ஸேவித்த அடையாளங்களை |
| உரைத்த |
– |
அருளிச்செய்த; |
| செந்நெல் |
– |
செந்நெற் பயிர்களானவை |
| ஓங்கி |
– |
(ஆகாசமளவும்) உயர்ந்து |
| புரவிமுகம் செய்து |
– |
குதிரை முகம்போலத் தலைவணங்கி |
| விளை |
– |
விளையா நிற்கப்பெற்ற |
| கழனி |
– |
வயல்களையுடைய |
| புதுவை |
– |
ஸ்ரீவில்லிபுத்தார்க்குத் தலைவரும் |
| திருவின் |
– |
(விஷ்ணுபக்தியாகிற) செல்வத்தினால் |
| பொலி |
– |
விளங்கா நின்றுள்ளவரும் |
| மறைவாணன் |
– |
வேதத்துக்கு நிர்வாஹகருமான |
| பட்டாபிரான் |
– |
பெரியாழ்வார் |
| சொன்ன |
– |
அருளிச்செய்த |
| மாலை பத்தும் |
– |
சொல்மாலையாகிற இப்பத்துப் பாட்டையும் |
| பரவும் மனம் உடை |
– |
அநுஸத்திக்கைக் கீடான மகஸ்ஸையுடையவரும் |
| பக்தர் உள்ளார் |
– |
பக்தியையுடையவருமாயிருப்பவர்கள் |
| பரமன் |
– |
பரமபுருஷனுடைய |
| அடி |
– |
திருவடிகளை |
| சேர்வர்கள் |
– |
கிட்டப்பெறுவார்கள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானைக் காணவேணுமென்று தேடுகிறவர்களுக்கு அடையாளங்களைச் சொல்லிப் பெரியாழ்வார் அருளிச்செய்த இப்பத்துப் பாட்டையுமே துமவர்கள், எம்பெருமானை காண்கைக்குத் தேட வேண்டாதே அவனோடு நித்யாநுபவம் பண்ணலாம்படி அவனுடைய திருவடிகளைச் சேரப் பெறுவார்கள் என்று- பலஞ்சொல்லித் தலைக்கட்டியவாறு. தேடுகிறவர்களுடைய தன்மையையும், கண்டவர்களுடைய தன்மையையும் தாமே அடைந்து பேசினமையால் “கண்டசுவடுரைத்து” என்றென்க. புரை- உவமவுருபு. செந்நெல்தாள்கள் ஓங்கி நுனியிற் கதிர்வாங்கித் தழைத்திருக்கும் படிக்குக் குதிரை முகத்தை உவமை கூறியது எதற்குமென்க: “வரம்புற்றகதிர்ச் செந்நெல் தாள் சாய்ந்துத் தலைவணங்கும்” என்றது காண்க. திருவின் + போலி, திருவிற்பொலி. (ய)
அடிவரவு:- கதிர் நாந்தகம் கொலை தோயம் நீரேறு பொல்லா வெள்ளை நாழிகை மன் கரிய அலம்பா.
English Translation
This decad of songs by bright Vedic seer Pattarbiran of Srivilliputtur where paddy grows tall and bends low like a horse, tells the clues for seeing the dark cloud-hued Lord. Devotees who recite it by heard will attain the feet of the Lord.
