(315)
மாயச் சகட முதைத்து மருதிறுத்து
ஆயர்க ளோடுபோய் ஆநிரை காத்துஅணி
வேயின் குழலூதி வித்தக னாய்நின்ற
ஆயர்க ளேற்றினைப் பாடிப்பற ஆநிரை மேய்த்தானைப் பாடிப்பற.
பதவுரை
| மாயம் |
– |
க்ருத்ரிமமான அஸுரராலிஷ்டமான |
| சகடம் |
– |
சகடத்தை |
| உதைத்து |
– |
(திருவடிகளால்) உதைத்துத் தள்ளியும் |
| மருது |
– |
இரட்டை மருதமரங்களை |
| இறுத்து |
– |
இற்றுவிழும்படி பண்ணியும், (பின்பு) |
| ஆயர்களோடு |
– |
இடையர்களோடு கூட |
| போய் |
– |
(காடேறப்) போய் |
| ஆநிரை |
– |
பசுக்களின் திரளை |
| காத்து |
– |
ரக்ஷித்தும் |
| அணி |
– |
அழகிய |
| வேயின் குழல் |
– |
வேய்ங்குழலை |
| ஊதி |
– |
ஊதியும் |
|
வித்தகன் ஆய் நின்ற விஸ்மயநீயனாய் நின்ற |
||
| ஆயர்கள் ஏற்றினை |
– |
இடையர்க்குத் தலைவனான கண்ணபிரானை பாடிப்பற |
|
ஆநிரை மேய்த்தானை பாடிப் பற |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – இப்பாட்டிற் கூறப்பட்டுள்ள வரலாறுகள் கீழ்ப்பலவிடங்களில் எழுதப்பட்டுள்ளமை அறிக. வேயின் குழல் – வேயினால் (மூங்கினால்) செய்யப்பட்ட குழல் ; முரளி.
English Translation
He smote the bedeviled cart, broke the Marudu trees, went with the cowherds and grazed cows, then played the flute and stood like a wonder. Sing the cowherds’ king and swing. Sing of the cow-grazer and swing.
