(315)

(315)

மாயச் சகட முதைத்து மருதிறுத்து

ஆயர்க ளோடுபோய் ஆநிரை காத்துஅணி

வேயின் குழலூதி வித்தக னாய்நின்ற

ஆயர்க ளேற்றினைப் பாடிப்பற ஆநிரை மேய்த்தானைப் பாடிப்பற.

பதவுரை

மாயம்

–

க்ருத்ரிமமான அஸுரராலிஷ்டமான
சகடம்

–

சகடத்தை
உதைத்து

–

(திருவடிகளால்) உதைத்துத் தள்ளியும்
மருது

–

இரட்டை மருதமரங்களை
இறுத்து

–

இற்றுவிழும்படி பண்ணியும், (பின்பு)
ஆயர்களோடு

–

இடையர்களோடு கூட
போய்

–

(காடேறப்) போய்
ஆநிரை

–

பசுக்களின் திரளை
காத்து

–

ரக்ஷித்தும்
அணி

–

அழகிய
வேயின் குழல்

–

வேய்ங்குழலை
ஊதி

–

ஊதியும்

வித்தகன் ஆய் நின்ற விஸ்மயநீயனாய் நின்ற

ஆயர்கள் ஏற்றினை

–

இடையர்க்குத் தலைவனான கண்ணபிரானை  பாடிப்பற

ஆநிரை மேய்த்தானை பாடிப் பற

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – இப்பாட்டிற் கூறப்பட்டுள்ள வரலாறுகள் கீழ்ப்பலவிடங்களில் எழுதப்பட்டுள்ளமை அறிக. வேயின் குழல் – வேயினால் (மூங்கினால்) செய்யப்பட்ட குழல் ; முரளி.

English Translation

He smote the bedeviled cart, broke the Marudu trees, went with the cowherds and grazed cows, then played the flute and stood like a wonder. Sing the cowherds’ king and swing. Sing of the cow-grazer and swing.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top