(313)
காளியன் பொய்கை கலங்கப்பாய்ந் திட்டுஅவன்
நீள்முடி யைந்திலும் நின்று நடம்செய்து
மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன்
தோள்வலி வீரமே பாடிப்பற தூமணி வண்ணனைப் பாடிப்பற.
பதவுரை
| காளியன் பொய்கை |
– |
காளியன் கிடந்த பொய்கையானது |
| கலங்க |
– |
கலங்கும்படி |
| பாய்ந்திட்டு |
– |
(அதில்) குதித்து |
| அவன் |
– |
அக்காளியனுடைய |
| நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து |
– |
ஆகாசத்தளவும் நீண்ட ஐந்து படங்களின் மேலும் நின்று கூத்தாடி, |
| மீள |
– |
அவன் இளைத்துச் சரணம் புகுந்த பிறகு. |
| அவனுக்கு |
– |
அக்காளியனுக்கு |
| அருள்செய்து |
– |
(ப்ராணன் நிற்கும்படி) க்ருபை செய்தருளின் |
| வித்தகன் |
– |
லிஸ்மயநீயனான கண்ணபிரானுடைய |
| தோள் வலி |
– |
புஜபலத்தையும் |
| வீரம் |
– |
வீரப்பாட்டையும் பாடிப் பற; |
| தூ மணி |
– |
பழிப்பற்ற நீலமணி போன்ற |
| வண்ணனை |
– |
நிறத்தையுடையவனை பாடிப் பற |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ். “பஞ்சவர்தூதனாய்” என்ற ஐந்தாம்பாட்டில் அருளிச் செய்யப்பட்ட காளியவ்ருந்தாந்தந்தன்னையே மீண்டும் இப்பாட்டால் அருளிச் செய்வாரென் எனில்; மற்ற சந்ருக்களிற்காட்டில் காளியன் மிக்க கொடியனாதலால் அவன் கொழுப்பையடக்கின உபகாரஸ்ம்ருதி; அதனை ஒரு நாற் சொல்லி நிற்கவொட்டிற்றில்லை யெனக்கொள்க. சகடம், பூதளை முதலிய தீர்ப்பப்பூடுகள் கண்ணபிரா னொருவனுக்கே தீங்குவிளைக்கக் கருத்துக்கொண்டன; காளியன் அங்ஙனன்றிக்கே, தான் கிடந்த பொய்கையை அணுகின ஸ்தாவர ஜங்கமாதிகளெல்லாம் தன் விஷத்தின் அழலாலே பட்டுவிழும்படி ஒரூர்க்கடங்கத் தீங்குசெய்து போந்தமையால் இவனது கொடுமை பேச்சுக்கு நிலமன்றே.
English Translation
Kaliya’s lake turned turbid as he jumped on the five big hoods, stood and danced, and showered his grace thereafter. Sing his glory and swing, sing of the gem-hued Lord and swing.
