(311)

(311)

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து

நஞ்சுமிழ் நாகம் கிடந்தநல் பொய்கைபுக்கு

அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த

அஞ்சன வண்ணனைப் பாடிப்பற அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற.

பதவுரை

பஞ்சவர்

–

பஞ்சபாண்டவர்களுக்காக
தூதன் ஆய்

–

(துரியோதநாதிகளிடம்) தூதனாய்ப் போய்

(அத்துரியோதனநாதிகள் தன்சொற்படி இசைந்துவாராமையால்)

பாரதம்

–

பாரத யுத்தத்தை
கை செய்து

–

அணிவகுத்துச்செய்து,
கஞ்சு உமிழ்

–

விஷத்தைக் கக்குகின்ற
காகம் கிடந்த

–

காளியன் கிடந்த
நல்பொய்கை புக்கு

–

கொடிய மடுவிலே புகுந்து

அஞ்ச (அக்காளியின்) அஞ்சும்படி

பணத்தின் மேல்

–

(அவனது) படத்திலே
பாய்ந்திட்டு

–

குதித்து நடமாடி அக்காளியனை இளைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க)
அருள் செய்த

–

அப்பாம்பின் பிராணனைக் கருணையால் விரட்டிட்ட

அஞ்சனவண்ணனை பாடிப்பற;

அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரான்  பாண்டவர்களுக்காகத் தூதுசென்றதும், பின்பு பாரத யுத்தங் கோடித்தததும், காளியன்வலியை அடக்கினதும் கீழ்ப் பலவிடங்களில் விரித்துரைக்கப்பட்டுள்ளன. காளியனை அடக்கியது முன்னும், பாரதம் கைது செய்தது அதற்குப் பின்னும் நடந்ததாயினும் அம்முறையைக் கருதாமல் இங்ஙனமருளிச் செய்தாரென்று “கைசெய்து” என்றவிடத்து, கை- தமிழ் உபஸர்க்கமென்பர். நல்பொய்கை- எதிர்மறையிலக்கணை.

English Translation

As messenger for the five, he abetted the war. He went into the lake where a serpent laid spitting venom. He danced on the five hoods and showered his grace. Sing of the dark-hued Lord and swing. Sing of Yasoda’s lion and swing.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top