(311)
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து
நஞ்சுமிழ் நாகம் கிடந்தநல் பொய்கைபுக்கு
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
அஞ்சன வண்ணனைப் பாடிப்பற அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற.
பதவுரை
| பஞ்சவர் |
– |
பஞ்சபாண்டவர்களுக்காக |
| தூதன் ஆய் |
– |
(துரியோதநாதிகளிடம்) தூதனாய்ப் போய் |
|
(அத்துரியோதனநாதிகள் தன்சொற்படி இசைந்துவாராமையால்) |
||
| பாரதம் |
– |
பாரத யுத்தத்தை |
| கை செய்து |
– |
அணிவகுத்துச்செய்து, |
| கஞ்சு உமிழ் |
– |
விஷத்தைக் கக்குகின்ற |
| காகம் கிடந்த |
– |
காளியன் கிடந்த |
| நல்பொய்கை புக்கு |
– |
கொடிய மடுவிலே புகுந்து |
|
அஞ்ச (அக்காளியின்) அஞ்சும்படி |
||
| பணத்தின் மேல் |
– |
(அவனது) படத்திலே |
| பாய்ந்திட்டு |
– |
குதித்து நடமாடி அக்காளியனை இளைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க) |
| அருள் செய்த |
– |
அப்பாம்பின் பிராணனைக் கருணையால் விரட்டிட்ட |
|
அஞ்சனவண்ணனை பாடிப்பற; |
||
|
அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கண்ணபிரான் பாண்டவர்களுக்காகத் தூதுசென்றதும், பின்பு பாரத யுத்தங் கோடித்தததும், காளியன்வலியை அடக்கினதும் கீழ்ப் பலவிடங்களில் விரித்துரைக்கப்பட்டுள்ளன. காளியனை அடக்கியது முன்னும், பாரதம் கைது செய்தது அதற்குப் பின்னும் நடந்ததாயினும் அம்முறையைக் கருதாமல் இங்ஙனமருளிச் செய்தாரென்று “கைசெய்து” என்றவிடத்து, கை- தமிழ் உபஸர்க்கமென்பர். நல்பொய்கை- எதிர்மறையிலக்கணை.
English Translation
As messenger for the five, he abetted the war. He went into the lake where a serpent laid spitting venom. He danced on the five hoods and showered his grace. Sing of the dark-hued Lord and swing. Sing of Yasoda’s lion and swing.
