(252)
திண்ணார் வெண்சங் குடையாய் திருநாள் திருவோண மின்றேழு நாள்முன்
பண்ணேர் மொழியாரைக் கூவி முளையட்டிப்பல்லாண்டு கூறு வித்தேன்
கண்ணாலம் செய்யக் கறியும் கலத்த ரிசியும் ஆக்கி வைத்தேன்
கண்ணாநீ நாளைத் தொட்டுக் கன்றின்பின் போகேல் கோலம்செய் திங்கேயிரு.
பதவுரை
| திண் ஆர் |
– |
திண்மைபொருந்திய |
| வெண் சங்கு |
– |
வெண்சங்கத்தை |
| உடையாய் |
– |
(திருக்கையில்) ஏந்தியுள்ளவனே! |
| கண்ணா |
– |
கண்ணபிரானே! |
| திருநாள் |
– |
(நீ பிறந்த) திருநக்ஷத்திரமாகிய |
| திருஓணம் |
– |
திருவோண க்ஷத்திரம் |
| இன்று |
– |
இற்றைக்கு |
| ஏழுநாள் |
– |
ஏழாவது நாளாகும்; |
|
(ஆதலால்,) |
||
| முன் |
– |
முதல் முதலாக |
| பண் ஏர் மொழியாரை கூவி |
– |
பண்ணோடே கூடின அழகிய பேச்சையுடைய மாதர்களையழைத்து |
| முளை அட்டி |
– |
அங்குராரோபணம் பண்ணி |
| பல்லாண்டு கூறுவித்தேன் |
– |
மங்களாசாஸனமும் பண்ணுவித்தேன்; |
| கண்ணாலம் செய்ய |
– |
(திருவோணத்தினன்று) திருக்கல்யாணம் செய்வதற்கு |
| கறியும் |
– |
கறியமுதுகளையும் |
| அரிசியும் |
– |
அமுதுபடியையும் |
| கலத்தது ஆக்கி வைத்தேன் |
– |
பாத்திரங்களில் சேமித்து வைத்திருக்கின்றேன்; |
|
நீ-; |
||
| நாளைத்தொட்டு |
– |
நாளை முதற்கொண்டு |
| கன்றின்பின் |
– |
கன்றுகளின் பின்னே |
| போகேல் |
– |
(காட்டுக்குப்) போகவேண்டா; |
| கோலம் செய்து |
– |
(உன் வடிவுக்குத்தக்க) அலங்காரங்களைச் செய்துகொண்டு |
| இங்கே இரு |
– |
இந்த அகத்திலேயே இருக்கக்கடவாயாக. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திண்ஆர் – சத்ருநிரஸநத்தில் நிலைபேராமல் நின்று முழங்கும் திண்மையைச் சொல்லுகிறது. யசோதைப்பிராட்டி கண்ணனைநோக்கி இப்பாசுரஞ் சொல்லியது. விசாகாநக்ஷத்திரத்தினன்று என்றுணர்க. பண் – இசைப்பாட்டு. இற்றைக்கு ஏழாவது நாளாகிய உன் ஜந்மநக்ஷத்திரத்தில் உனக்கு விசேஷமான மங்களகாரியங்களைச் செய்வதற்காக மங்கலப் பாட்டுக்களையும் பாடுவித்தேன்; அன்றைக்கு வேண்டிய வஸ்துக்களையும் இப்போதே ஸித்தப்படுத்தி வைத்திருக்கிறேன்; ஆகையால் இனி நீ சாதித்தொழிலைத் தவிர்ந்து உத்ஸவிக்ரஹம் போல் உன்னை அலங்கரித்துக்கொண்டு இவ்விடத்திலேயே வீற்றிரு என்று யசோதைப்பிராட்டி வேண்டுகின்றாள். முளையட்டுதல் – கல்யாணாங்கமாக நவதானியங்களைக் கொண்டு பாலிகை வைக்கை. கண்ணாலம் – மரூஉமொழி.
English Translation
O Lord wielding the strong white conch! Seven days hence it is Sravanam, your birthday. As a prelude to the celebrations I let the seeds germinate, and called in the beautiful singing-girls to come and sing “Many happy returns”. I have filled the vessels with rice and vegetables. O Krishna, dear-as-my-eyes, from tomorrow do not go after the calves. Stay here, decked for the occasion.
