(252)

(252)

திண்ணார் வெண்சங் குடையாய் திருநாள் திருவோண மின்றேழு நாள்முன்

பண்ணேர் மொழியாரைக் கூவி முளையட்டிப்பல்லாண்டு கூறு வித்தேன்

கண்ணாலம் செய்யக் கறியும் கலத்த ரிசியும் ஆக்கி வைத்தேன்

கண்ணாநீ நாளைத் தொட்டுக் கன்றின்பின் போகேல் கோலம்செய் திங்கேயிரு.

பதவுரை

திண் ஆர்

–

திண்மைபொருந்திய
வெண் சங்கு

–

வெண்சங்கத்தை
உடையாய்

–

(திருக்கையில்) ஏந்தியுள்ளவனே!
கண்ணா

–

கண்ணபிரானே!
திருநாள்

–

(நீ பிறந்த) திருநக்ஷத்திரமாகிய
திருஓணம்

–

திருவோண க்ஷத்திரம்
இன்று

–

இற்றைக்கு
ஏழுநாள்

–

ஏழாவது நாளாகும்;

(ஆதலால்,)

முன்

–

முதல் முதலாக
பண் ஏர் மொழியாரை  கூவி

–

பண்ணோடே கூடின அழகிய பேச்சையுடைய மாதர்களையழைத்து
முளை அட்டி

–

அங்குராரோபணம் பண்ணி
பல்லாண்டு கூறுவித்தேன்

–

மங்களாசாஸனமும் பண்ணுவித்தேன்;
கண்ணாலம் செய்ய

–

(திருவோணத்தினன்று) திருக்கல்யாணம் செய்வதற்கு
கறியும்

–

கறியமுதுகளையும்
அரிசியும்

–

அமுதுபடியையும்
கலத்தது ஆக்கி வைத்தேன்

–

பாத்திரங்களில் சேமித்து வைத்திருக்கின்றேன்;

நீ-;

நாளைத்தொட்டு

–

நாளை முதற்கொண்டு
கன்றின்பின்

–

கன்றுகளின் பின்னே
போகேல்

–

(காட்டுக்குப்) போகவேண்டா;
கோலம் செய்து

–

(உன் வடிவுக்குத்தக்க) அலங்காரங்களைச் செய்துகொண்டு
இங்கே இரு

–

இந்த அகத்திலேயே இருக்கக்கடவாயாக.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திண்ஆர் – சத்ருநிரஸநத்தில் நிலைபேராமல் நின்று முழங்கும் திண்மையைச் சொல்லுகிறது.  யசோதைப்பிராட்டி கண்ணனைநோக்கி இப்பாசுரஞ் சொல்லியது.  விசாகாநக்ஷத்திரத்தினன்று என்றுணர்க.  பண் – இசைப்பாட்டு.  இற்றைக்கு ஏழாவது நாளாகிய உன் ஜந்மநக்ஷத்திரத்தில் உனக்கு விசேஷமான மங்களகாரியங்களைச் செய்வதற்காக மங்கலப் பாட்டுக்களையும் பாடுவித்தேன்; அன்றைக்கு வேண்டிய வஸ்துக்களையும் இப்போதே ஸித்தப்படுத்தி வைத்திருக்கிறேன்; ஆகையால் இனி நீ சாதித்தொழிலைத் தவிர்ந்து உத்ஸவிக்ரஹம் போல் உன்னை அலங்கரித்துக்கொண்டு இவ்விடத்திலேயே வீற்றிரு என்று யசோதைப்பிராட்டி வேண்டுகின்றாள்.    முளையட்டுதல் – கல்யாணாங்கமாக நவதானியங்களைக் கொண்டு பாலிகை வைக்கை.  கண்ணாலம் – மரூஉமொழி.

English Translation

O Lord wielding the strong white conch! Seven days hence it is Sravanam, your birthday. As a prelude to the celebrations I let the seeds germinate, and called in the beautiful singing-girls to come and sing “Many happy returns”. I have filled the vessels with rice and vegetables. O Krishna, dear-as-my-eyes, from tomorrow do not go after the calves. Stay here, decked for the occasion.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top