(251)

(251 )

கேட்டறி யாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்தி ரற்கு

காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்துடன் உண்டாய் போலும்

ஊட்ட முதலிலேன் உன்தன் னைக்கொண்டு ஒருபோ தும்எனக் கரிது

வாட்டமி லாப்புகழ் வாசுதே வாஉன்னை அஞ்சுவன் இன்று தொட்டும்.

பதவுரை

கேசவா

கண்ணபிரானே!
கேட்டு அறியாதன

(உன் விஷயமாக இதுவரை நான்) கேட்டறியாதவற்றை
கேட்கின்றேன்

(இன்று) கேட்கப்பெற்றேன்;

(அவற்றில் ஒன்று சொல்லுகின்றேன் கேள்;)

கோவலர்

கோபாலர்கள்
இந்திரற்கு

இந்திரனைப் பூஜிப்பதற்காக
காட்டிய

அனுப்பிய
சோறும்

சோற்றையும்
கறியும்

(அதுக்குத் தக்க) கறியையும்
தயிரும்

தயிரையும்
உடன் கலந்து

ஒன்றுசேரக் கலந்து
உண்டாய் போலும்

உண்டலனன்றோ நீ;

(இப்படி உண்ணவல்ல பெருவயிற்றாளனான உன்னை)

ஊட்ட

(நாடோறும்) ஊட்டிவளர்க்க(த்தக்க)
முதல் இலேன்

கைம்முதல் எனக்கில்லை;
உன் தன்னை கொண்டு

உன்னை வைத்துக்கொண்டு
ஒருபோதும்

ஒரு வேளையும்
எனக்கு அரிது

என்னால் ஆற்ற முடியாது;
வாட்டம் இலா

(என்றும்) வாடாத
புகழ்

புகழையுடைய
வாசுதேவா

வஸுதேவர் திருமகனே!
இன்று தொட்டும்

இன்று முதலாக
உன்னை

உன்னைக் குறித்து
அஞ்சுவன்

அஞ்சாநின்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருவாய்ப்பாடியில் ஆயர்களெல்லாருங்கூடி மழையின் பொருட்டாக இந்திரனை ஆராதித்தற்கென்று வழக்கப்படி சமைத்தசோற்றைக் கண்ணபிரான் ஒருகால் அவனுக்கு இடாதபடி விலக்கிக் கோவர்த்தனமலைக்கு இடச்சொல்லித் தானே ஒரு தேவதாரூபங்கொண்டு அமுதுசெய்தனனென்ற வரலாற்றைப் பலர் சொல்ல கேட்டுணர்ந்த யசோதைப் பிராட்டி அக்கண்ணனை நோக்கிப்  ‘பிரானே! நீ இங்ஙனே செய்தாயோதான்’ என்ன; அவனும் மறுமாற்ற முரையாதொழிய ‘பாசன நல்லன பண்டிகளாற் புகப்பெய்த அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமுந் தயிர்வாவியும் நெய்யளறுமடங்கப் பொட்டத்துற்றின உனக்கு நான் நாடோறு மவ்வளவு சோற்றையூட்டி வளர்க்கைக்கீடான கைச்சாக்கற்றவளாகையால் இனி உன்னை எவ்வாறு வளர்க்கக்கடவதென்று மிகவுமஞ்சாநின்றே னென்கிறாளென்க. முதல் – கைம்முதல்; மூலத்ரவ்யம் என்றபடி.

English Translation

O Vasudeva of everlasting fame! I am hearing things which I never heard before! It seems you gobbled up the food, side-dishes and curds that the cowherds had readied for Indra, all in one gulp! Let alone feeding you every day, keeping you even for one day is going to be difficult for me! From this day on, I Fear you!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top