(245)
கன்னிநன் மாமதிள் சூழ்தரு பூம்பொழில் காவிரித் தென்ன ரங்கம்
மன்னிய சீர்மது சூதனா கேசவா பாவியேன் வாழ்வு கந்து
உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறுகாலே யூட்டி ஒருப்ப டுத்தேன்
என்னின் மனம்வலி யாள்ஒரு பெண்இல்லை என்குட்ட னேமுத் தம்தா.
பதவுரை
| கன்னி |
– |
அழிவற்ற |
| நல் |
– |
விலக்ஷணமான |
| மா மதின் |
– |
பெரியமதில்களாலே |
| சூழ்தரு |
– |
சூழப்பட்டு |
| பூ பொழில் |
– |
பூஞ்சோலைகளையுடைய |
| காவிரி |
– |
காவேரிநதியோடு கூடிய |
| தென் அரங்கம் |
– |
தென்திருவரங்கத்தில் |
| மன்னிய |
– |
பொருந்தியெழுந்தருளியிருக்கின்ற |
| சீர் |
– |
கல்யாணகுணயுக்தனான |
| மது சூதனா |
– |
மதுஸூதநனே! [கண்ணபிரானே!] |
| கேசவா |
– |
கேசவனே! |
| பாவியேன் |
– |
பாவியாகிய நான் |
| வாழ்வு உகந்து |
– |
(நமது ஜாதிக்கேற்ற கன்று மேய்க்கையாகிற) ஜீவநத்தை விரும்பி |
| உன்னை |
– |
(இவ்வலைச்சலுக்கு ஆளல்லாத) உன்னை |
| சிறுகாவே |
– |
விடியற்காலத்திலேயே |
| ஊட்டி |
– |
உண்ணச்செய்து |
| இள கன்று மேய்க்க |
– |
இளங்கன்றுகளை மேய்க்கைக்காக (அவற்றின் பின்னே போக) |
| ஒருப்படுத்தேன் |
– |
ஸம்மதித்தேன்; |
|
(இப்படி உன்னை அனுப்பிவிட்டுப் பொறுத்திருந்த) |
||
| என்னில் |
– |
என்னிற்காட்டில் |
| மனம் வலியாள் |
– |
கல்நெஞ்சையுடையளான |
| ஒரு பெண் |
– |
ஒரு ஸ்த்ரீயும் |
| இல்லை |
– |
(இவ்வுலகில்) இல்லை; |
| என் குட்டனே |
– |
எனது குழந்தாய்! |
| முத்தம் தா |
– |
(எனக்கு) ஒரு முத்தம்கொடு. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கன்னி-ஸ்திரமாயிருக்கை; நிகண்டு;- “கன்னிபெண் அழிவில்லாமை கட்டிளமைக்கும் பேரே”” என்றான் மண்டலபுருடன். யாவரும்வந்தடி வணங்க அரங்கநகர் துயின்ற ஸர்வேச்வரனான உன் அருமையை நோக்காது உன்னை இடைப்பிள்ளையாகவே நினைத்துச் சாதித்தொழிலென்று கன்று மேய்க்கைக்காகக் காலையிலே ஊட்டிக் காடேறப்போகவிட்ட எனது நெஞ்சின் காடிந்யத்தை என்னென்று சொல்வேன்; இவ்வாறு கடினமான நெஞ்சையுடையஸ்த்ரீ மர்ராரெனுங் கிடைப்பாளோவென்று இவ்வுலகெங்குந் தேடினாலும் கிடையாள்; வேறு சிலராகில் நெஞ்சழிந்து விழுந்து விடார்களோ? இனி இதைப்பற்றிச் சிந்தித்துப் பயனென்? எனக்குண்டான இவ்வருத்தமெல்லாந்தீர ஒருமுத்தங் கொடுத்தருள் என்று அணைத்து உகந்து சொல்லுகின்றாள். வாழ்வு உகந்து என்ற சொல்நயத்தால்-ஸ்வப்ரயோஜநத்தைக் கணிசித்தேனேயொழிய உன் ஸம்ருத்தியை நான் விரும்பிற்றிலேனே என்று உள் வெதும்புகின்றமை தோற்றும். ஒருப்படுத்தேன்=ஒருப்பாடு-ஒருமனப்படுதல், ஸம்மதித்தல் என்றபடி: ‘நீ கன்று மேய்க்கும்படியை நான் ஸம்மதித்தேன்’ என்கை. “ஒருப்படுத்தேன்”” என்கிறவிது-உடன்பாட்டுக்கும் எதிமறைக்கும்
பொதுவான வினை; இங்கு உடன்பாட்டில் வந்ததென்க. முத்தம்-அதரம்.
English Translation
O Madhusudana, residing with lasting glory in strong walled Srirangam amid fragrant groves watered by the Kaveri River! O Kesava, life-breath of this wicked self! Wantonly I fed you early in the morning and sent you to graze the calves. There is no human with a heart harder than mine! My child, quick, gives me a kiss!
